Thiruvazhunthoor ( Sri Devaadi Raja Perumal Temple )
Azhwar | Paasuram | Count | Video | Audio |
---|---|---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
திருமங்கையாழ்வார் | திருநெடுந்தாண்டகம் | |||
திருமங்கையாழ்வார் | சிறிய திருமடல் | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | |||
** தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ * நள்ளிருட்கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும் *
முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர் *
அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே
|
|
|
பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை மாள *
பாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும் *
நீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள் *
ஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே
|
|
|
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும் *
உம்பர் வாளிக் கிலக்காக உதிர்த்த வுரவோ னூர்போலும் *
கொம்பி லார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் *
அம்ப ராவும் கண்மடவார் ஐம்பா லணையும் அழுந்தூரே
|
|
|
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து * என்
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும் *
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும் *
அள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே
|
|
|
பகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய் *
நிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும் *
துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய் *
அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே
|
|
|
ஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி *
மாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும் *
நீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ *
ஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே
|
|
|
மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து * என்
நீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் * வேலைக்
கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து *
ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே
|
|
|
வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து * என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும் *
பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள் * ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே
|
|
|
என்னைம் புலனு மெழிலுங்கொண் டிங்கே நெருந லெழுந்தருளி *
பொன்னங் கலைகள் மெலிவெய்தப் போன புனித ரூர்போலும் *
மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட *
அன்னம் பெடையோ டுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே
|
|
|
** நெல்லில் குவளை கண்காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட *
அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி யழுந்தூர் நின்றானை *
வல்லிப் பொதும்பில் குயில்கூவும் மங்கை வேந்தன் பரகாலன் *
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை சொல்லப் பாவம் நில்லாவே
|
|
|
** சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த *
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை *
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே
|
|
|
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும் *
மூவா வானவனை முழுநீர்வண் ணனை * அடியார்க்கு
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே
|
|
|
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை *
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை *
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை * அடியே னடைந்துய்ந்து போனேனே
|
|
|
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை * அதனுக் கருள்செய்த போரேற்றை *
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றானை * அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே
|
|
|
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை *
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை *
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே
|
|
|
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும் *
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை * அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியானை * அடியேன் கண்டுகொண்டு களித்தேனே
|
|
|
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா *
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை *
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே
|
|
|
நிலையா ளாகவென்னை யுகந்தானை * நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும் *
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற *
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே
|
|
|
** பேரா னைக்குடந்தைப் பெருமானை * இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை *
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே
|
|
|
** திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
அறமுதல் வனவனை அணியாலியர் கோன் மருவார் *
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும் *
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே
|
|
|
** திருவுக் கும்திரு வாகிய செல்வா தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா *
உருவச் செஞ்சுட ராழிவல் லானே உலகுண் டவொரு வா திரு மார்பா *
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து * ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய் * என்மனத் தேமன்னி நின்றாய் மால்வண்ணா மழை போலொளி வண்ணா *
சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடு மாலே *
அந்தோ நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும் நீண்ட தோளுடை யாய் அடி யேனை *
செய்யா தவுல கத்திடைச் செய்தாய் சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து *
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப் போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன் *
ஐயா நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்
வரனே * மாதவ னே மது சூதா மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண் *
நரனே நாரண னேதிரு நறையூர் நம்பீ எம்பெரு மான்உம்ப ராளும் அரனே *
ஆதிவ ராகமுன் னானாய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து *
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும் பண்பா ளா பர னே பவித் திரனே *
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை கரும மாவது மென்றனக் கறிந்தேன் *
அண்டா நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச் சொன்னார் சொல்லி நகும்பரி சே * பெற்ற
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும் தாடாளா தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்
சேயாய் * கிரேத திரேத துவாபர கலியு கமிவை நான்குமு னானாய் *
ஆயா நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய் கார்வண் ணா கடல் போல் ஒளி வண்ணா *
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய் எந்தாய் அந்தர மேழுமு னானாய் *
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப் போக மேநுகர் வான்புகுந்து * ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
நெடியா னே கடி ஆர்கலி நம்பீ நின்னை யேநினைந் திங்கிருப் பேனை *
கடியார் காளைய ரைவர் புகுந்து காவல் செய்தவக் காவலைப் பிழைத்து *
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன் கூறை சோறிவை தந்தெனக் கருளி *
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக் கூறை சோறிவை தா என்று குமைத்துப்
போகார் * நானவ ரைப்பொறுக் ககிலேன் புனிதா புட்கொடி யாய் நெடு மாலே *
தீவாய் நாகணை யில்துயில் வானே திருமா லே இனிச் செய்வதொன் றறியேன் *
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே
|
|
|
** அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை *
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன் *
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை தூய மாலை யிவைபத்தும் வல்லார் *
மன்னி மன்னவ ராயுல காண்டு மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே
|
|
|
** செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்திருவடியி னிணைவருட முனிவ ரேத்த *
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின் *
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை *
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப * வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம் பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின் *
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம் அவைமுரலச் செங்கமல மலரை யேறி *
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று *
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ என்ன நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின் *
மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய *
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி *
இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின் *
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால *
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
சினமேவும் அடலரியி னுருவ மாகித் திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு *
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின் *
இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல் *
அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி *
தானமர வேழுலகு மளந்த வென்றித் தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின் *
தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச் செழுமாட மாளிகைகள் கூடந் தோறும் *
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப் பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன் *
அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின் *
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க *
அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து *
வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின் *
செம்பவள மரகதநன் முத்தம் காட்டத் திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும் *
அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற *
நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின் *
சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித் திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும் *
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
|
|
|
** பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை *
அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை *
கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன் கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல் *
ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார் ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே
|
|
|
கூந்த லார்மகிழ் கோவல னாய் * வெண்ணெய்
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய் *
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய *
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே
|
|
|
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும் *
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும் *
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு *
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே
|
|
|
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும் *
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை *
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று *
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே
|
|
|
கணமங்கை காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் *
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்
|
|
|
பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை * அள்ளல்வாய்
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை
|
|
|