Thiru Evvul ( Tiruvallore – Sri Veeraraghava Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | 1 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 10 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | 1 |
Total | 12 |
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *
நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *
அணைப்பார் கருத் தனா வான்
** காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர் *
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான் *
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று *
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன் *
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும் * அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள *
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து * அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து * அவனே
பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார் *
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால் *
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர் *
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான் *
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே
பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல் *
சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில் *
நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி *
ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே
சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும் *
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம் *
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும் * நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே
திங்க ளப்பு வானெரிகாலாகி * திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த * வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற *
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன் * பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன் *
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன் * எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள் *
வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன் *
அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த *
இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே
** இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை *
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன் *
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார் *
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே
என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை *
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை