086-Thirumoozhikkalam


Thirumoozhikkalam – Sri Moozhikkalathaan Perumal Temple

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 14

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.6

பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே *

முனியே திருமூழிக் களத்து விளக்கே *

இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய

கனியே * உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே</p


2   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 10

பொன்னானாய் பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான் *

என்னானாய் என்னானாய் என்னல் அல்லால் என்னறிவ னேழையேன் * உலக மேத்தும்

தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்

முன்னானாய் * பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 129

என்னை மனங் கவர்ந்த ஈசனை * வானவர்தம்

முன்னவனை மூழிக் களத்து விளக்கினை


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.1

** எங்கானலகங்கழிவாய் இரைதேர்ந்திங்கினிதமரும் *

செங்காலமடநாராய் திருமுழிக்களத்துறையும் *

கொங்கார்பூந்துழர்முடி யெங்குடக் கூத்தர்க்கென்தூதாய் *

முங்கால்களென்தலைமேல் கெழுமிரோநுமரோடே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.2

நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய் *

அமர்காதல் குருகினங்காள் அணிமுழிக்களத்துறையும் *

எமலாரும் பழிப்புண்டு இங்கென் தம்மாலிழிப்புண்டு *

தமரோடங்குறைவார்க்குத் தக்கிலமேகேளீரே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.3

தக்கிலமேகேளீர்கள் தடம்புனல்வாயிரைதேரும் *

கொக்கினங்காள் குருனிங்காள் குளிர்மூழிக்களத்துறையும் *

செக்கமலர்த்தவர்போலும் கண்கைகால்செங்கனிவாய் *

அக்கமலத்திலைபோலும் திருமேனியடிகளுக்கே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.4

திருமேனியடிகளுக்குத் தீவினையேன்விடுதூதாய் *

திருமூழிக்களமென்னும் செமுநகர்வாயணிமுகில்காள் *

திருமேனியவட்கருளீர் என்றக்கால் * உம்மைத்தம்

திருமேனியோளியகற்றித் தெளிவிசும்புகடியுமே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.5

தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும் *

ஒளிமுகில்காள திருமுழிக்களத்துளையுமொண்சுடர்க்கு *

தெளி விசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும் *

துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.6

தூதுரைத்தல்செப்புமின்கள் தூமொழிவாய்வண்டினங்காள் *

போ திரைத்துமதுநுகரும் பொழில்முழிக்களத்துறையும் *

மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்ககென்வாய்மாற்றம் *

தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.7

சுடர்வளையுங்கலையுங்கொண்ட அருவினையேன்தோற்துறந்த *

படர்புகாழான் திருமூழிக்களத்துறையும்பங்கயக்கண் *

சுடர்பவளவாயனைக்கண்டு ஒருநாளோர்தூய்மாற்றம் *

படர்பொழில்வாய்க்குருகினங்காள் எனக்கொன்றுபணியீரே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.8

எனக்கொன்றுபணியீர்கள் இரும்பொழிவாயிரைதேர்ந்து *

மனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்தும்பிகாள் *

கனக்கொள்திண்மதீர்படைசூழ் திருமூழிக்களத்துறையும் *

புனக்கொள்காயாமேனிப் பூந்தழாய்முடியார்க்கே


12   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.9

பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு *

ஏந்துநீரிளங்குருகே திருமுழிக்களத்தாருக்கு *

ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்ககண்ணீர்ததும்ப *

தாந்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றேன்றுரையீரே


13   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.10

தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து *

மிகலின்பம்படமேவும் மென்னடையவன்னங்காள் *

மிகமேனிமெலிவெய்தி மேகலையுமிடழிந்து * என்

அகமேனியொழியாமே திருமுழிக்களத்தார்க்கே


14   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.7.11

** ஒழிலின்றித்திருமூழிக்களத்துரையு மொண்சுடரை *

ஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாலைவற்றியசொல் *

வழுவில்லாவண்குகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த *

அழிவில்லாவாயிரத்து இப்பந்தும கோயனுக்குமே