099-ThiruNaimisaranyam


Thiru Naimisaranyam ( Sri Devaraja Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.1

** வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே

பேணினேன் * அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான் *

ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை

நாணினேன் * வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.2

சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து *

புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா *

அலம்புரிதடக்கையாயனே மாயா வானவர்க்கரசனே * வானோர்

நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.3

சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து *

காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும் *

வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த

நாதனே * வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.4

வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை *

நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்ற எற்றிவைத்து எரியெழுகின்ற *

செம்பினாலியன்றபாவையைப் பாவீ ! தழுவெனமொழிவதர்க்கஞ்சி, * நம்பனே

வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.5

இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று *

நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை *

கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி *

நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.6

கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு *

ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால் * நமனார்

பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல்கிடந்தாய் *

நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.7

நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும் *

துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய *

வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா  தானவர்க்கென்றும் நஞ்சனே *

வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.8

ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு * ஐவர்

கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா *

பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து * என்

நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.9

ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல் *

தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன் *

தேனுடைக்கமலத்திருவினுக்கரசே திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய் *

நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.6.10

** ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று * இமையோர்

நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத் தெந்தையைச்சிந்தையுள்வைத்து *

காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள் *

ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே