103-Thiruppirudhi


Thiruppirudhi ( Joshimutt – Sri Paramapurusha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.1

** வாலிமாவலத்தொருவனதுடல்கெட வரிசிலைவளைவித்து * அன்று

ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற இருந்தநலிமய்யத்துள் *

ஆலிமாமுகிலதிர்தர அருவரை அகடுறமுகடேறி *

பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.2

கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய அருவரையணைகட்டி *

இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம் இருந்தநல்லிமயத்துள் *

விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர *

பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.3

துடிகொள் நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து * ஆயர்

இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்  இருந்தநல்லிமயத்துள் *

கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின் மணியறைமிசைவேழம் *

பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.4

மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்

திறந்து * வானவர்மணிமுடிபணிதர இருந்தநல்லிமயத்துள் *

இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவீசும் *

பிறங்குமாமணியருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.5

கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த *

அரைசெய்மேகலையலர்மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்துள் *

வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து *

பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.6

பணங்களாயிரமுடையநல்லவரவணைப் பள்ளிகொள் பரமாவென்று *

இணங்கிவானவர்மணிமுடிபணிதர இருந்தநல்லிமயத்துள் *

மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி *

பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும் பிரிதிசென்றடைநெஞ்சே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.7

கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி *

போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய பூம்பொழிலிமயத்துள் *

ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள் *

பேர்களாயிரம்பரவிநின்ற டிதொழும் பிரிதிசென்றடைநெஞ்சே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.8

இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை இரும்பசியதுகூர *

அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய அருவரையிமயத்துள் *

பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள் *

பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.9

ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல் *

ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை இருந்தநல்லிமயத்துள் *

தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி *

பேதைவண்டுகளெரியெனவெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.2.10

** கரியமாமுகிற்படலங்கள்கிடந்து அவைமுழங்கிட * களிறென்று

பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு பிரிதியெம்பெருமானை *

வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர் கலியனதொலிமாலை *

அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு  அருவினையடயாவே