Thirukkotiyoor ( Sri Uraga Mellanayaan Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | 22 |
திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | 1 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 12 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | 1 |
பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி | 2 |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 1 |
Total | 39 |
** வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் *
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் *
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் *
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே
ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார் *
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார் *
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று *
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் *
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் *
ஆணொப் பார்இவன் நேரில்லை காண் * திரு
வோணத் தானுல காளுமென் பார்களே
உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார் *
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து * எங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு *
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர் *
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் *
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்
கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் *
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால் *
ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட *
வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட மடநல்லார் *
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம் *
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் *
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே
பத்து நாளும் கடந்த இரண்டாநாள் *
எத்தி சையும் சயமரம் கோடித்து *
மத்த மாமலை தாங்கிய மைந்தனை *
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் *
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் *
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் *
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்
** செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர் *
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை *
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்த * இப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே</p
கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும் *
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் *
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க * நில்
அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா
** நாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்விருந் தோம்புவார் *
தேவகாரியம் செய்துவேதம் பயின்றுவாழ்திருக் கோட்டியூர் *
மூவர்காரிய மும்திருத்தும் முதல்வனைச்சிந்தி யாத * அப்
பாவகாரிக ளைப்படைத்தவன் எங்ஙனம்படைத் தான்கொலோ
குற்றமின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனு கூலராய் *
செற்றமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் *
துற்றியேழுல குண்டதூமணி வண்ணன்தன்னைத் தொழாதவர் *
பெற்றதாயர் வயிற்றினைப்பெரு நோய்செய்வான்பிறந் தார்களே
வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் * திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள் *
எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும்எண்ணகி லாதுபோய் *
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே
உரகமெல்லணை யான்கையில் உறை சங்கம்போல்மட வன்னங்கள் *
நிரைகணம்பரந் தேறும்செங்கம லவயல்திருக் கோட்டியூர் *
நரகநாசனை நாவிற்கொண்டழை யாதமானிட சாதியர் *
பருகுநீரும் உடுக்குங்கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ
ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர் சாடிப்போய் *
தீமைசெய்துஇள வாளைகள்விளை யாடுநீர்த்திருக் கோட்டியூர் *
நேமிசேர்தடங் கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடை *
பூமிபாரங்க ளுண்ணும்சோற்றினை வாங்கிப்புல்லைத் திணிமினே
பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால் *
ஏதமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் *
நாதனைநர சிங்கனைநவின் றேத்துவார்க ளுழக்கிய *
பாததூளி படுதலால்இவ் வுலகம்பாக்கியம் செய்ததே
குருந்தமொன்றொசித் தானொடும்சென்று கூடியாடி விழாச்செய்து *
திருந்துநான்மறை யோர்இராப்பகல் ஏத்திவாழ்திருக் கோட்டியூர் *
கருந்தடமுகில் வண்ணனைக்கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள் *
இருந்தவூரி லிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய் தார்கொலோ
நளிர்ந்தசீலன் நயாசல னபிமானதுங்கனை * நாடொறும்
தெளிந்தசெல்வனைச் சேவகஙகொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் *
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள் *
விளைந்த்தானியமு மிராக்கர் மீதுகொள்ளகிலார்களே
கொம்பினார்பொழில் வாய்குயிலினம் கோவிந்தன்குணம் பாடுசீர் *
செம்பொனார்மதிள் சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர் *
நம்பனைநர சிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால் *
எம்பிரான்தன சின்னங்கள்இவ ரிவரென்றுஆசைகள் தீர்வனே
காசின்வாய்க்கரம் விற்கிலும்கர வாதுமாற்றிலி சோறிட்டு *
தேசவார்த்தைப டைக்கும்வண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் *
கேசவாபுரு டோத்தமாகிளர் சோதியாய்குற ளாஎன்று *
பேசுவார்அடி யார்கள்எந்தம்மை விற்கவும் பெறுவார்களே
** சீதநீர்புடை சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர் *
ஆதியானடி யாரையும்அடி மையின்றித்திரி வாரையும் *
கோதில்பட்டர் பிரான்குளிர்புது வைமன்விட்டு சித்தன்சொல் *
ஏதமின்றிஉ ரைப்பவர் இருடீகேசனுக் காளரே
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த *
குறிப்பெனக்கு நன்மை பயக்க * வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல் *
தான்கடத்தும் தன்மையான் தாள்
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய் *
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன் *
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே * உகந்தா யையுகந் தடியேனே
** எங்க ளெம்மிறை யெம்பிரா னிமை யோர்க்கு நாயகன் * ஏத் தடியவர்
தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான் *
பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி *
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே
எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய் * நிலமகள்
செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான் *
மௌவல் மாலைவண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து * மாருதம்
தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே
வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை * எமக்கு
ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான் *
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை *
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே
ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து * உடம்பிலோர்
கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான் *
நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு * நன்னறுந்
தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே
வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன் * மதுமலர்த்
தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான் *
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி * வானுயர்
திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே
காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து * மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான் *
நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென *
தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே
கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று * மாமழை
நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான் *
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து * இளந்
தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே
பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து * அடியேனை யாளுகந்து
ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான் *
தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி *
தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே
கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை *
மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர் *
மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும் *
தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே
** ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் * அணிபொழில்
சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை *
நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த * இந்
நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க * ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை *
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய் *
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே
மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை *
கொன்னவிலும் ஆழிப் படையானை * கோட்டியூர்
அன்ன வுருவில் அரியை
பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *
மணிதிகழும் வண்தடக்கை மால்
இன்றா வறிகின்றே னல்லேன் * இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை * அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன் *
திருக்கோட்டி எந்தை திறம்
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *
மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு