Periyalwar_Thaniyan


பெரியாழ்வார் – தனியன்

Azhwar Paasuram Count Media
பெரியாழ்வார் தனியன் 3
Total 3

1   பெரியாழ்வார் – தனியன் – 1 – நாதமுனிகள் அருளிச் செய்தது

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான் *

நரபதி பரிக்லுப்தம் சுல்கம் ஆதாது காம: *

ச்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத் *

த்விஜ குலதிலகம்தம் விஷ்ணு சித்தம் நமாமி

   

2   பெரியாழ்வார் – தனியன் – 2 – பாண்டிய பட்டர் அருளிச் செய்தது

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று * ஒருகால்

சொன்னார் கழற்கமலம் சூடினோம் * முன்னாள்

கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மை யினிற் சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

   

3   பெரியாழ்வார் – தனியன் – 3 – பாண்டிய பட்டர் அருளிச் செய்தது

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று *

ஈண்டிய சங்கம் எடுத்தூத * வேண்டிய

வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான் *

பாதங்கள் யாமுடைய பற்று