Periyalwar_VaazhiThirunamam


பெரியாழ்வார் – வாழி திருநாமம்

Azhwar Paasuram Count Media
பெரியாழ்வார் வாழி திருநாமம் 1
Total 1

1   பெரியாழ்வார் – வாழி திருநாமம் – அப்பிள்ளை திருவாய் மலர்ந்தருளியது

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே *

நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே *

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே *

தொடைசூடிக்கொடுத்தவள்தன் தொழுந்தமப்பன் வாழியே *

செல்வநம்பி தன்னைப்போல் சிறப்புற்றான் வாழியே *

சென்றுகிழியறுத்து மால்தெய்வமென்றான் வாழியே *

வில்லிபுத்தூர்நகரத்தை விளங்கவைத்தான் வாழியே *

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே