Andal_Thaniyan


ஆண்டாள் – தனியன்

Azhwar Paasuram Count Media
ஆண்டாள் தனியன் 3
Total 3

1   ஆண்டாள் – தனியன் – 1 – ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்தது

நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம் *

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த மத்யாபயந்தீ *

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே *

கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய

   

2   ஆண்டாள் – தனியன் – 2 – ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்கு *

பன்னு திருப்பாவைப் பல்பதியம் * இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

   

3   ஆண்டாள் – தனியன் – 3 – ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை *

பாடி அருளவல்ல பல்வளையாய் * நாடிநீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *

நாம்கடவா வண்ணமே நல்கு