ஆண்டாள் – வாழி திருநாமம்
Azhwar | Paasuram | Count | Media | |
---|---|---|---|---|
ஆண்டாள் | வாழி திருநாமம் | 2 | ||
Total | 2 |
1 ஆண்டாள் – வாழி திருநாமம் – 1 – வேதப் பிரான் பட்டர் திருவாய் மலர்ந்தருளியது
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் *
ஜோதிமணிமாடம் தோன்றுமூர் * நீதியால்
நல்லபக்தர் வாழுமூர் * நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர் *
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் *
வேதமனைத்துக்கும் வித்தாகும் * கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை *
வையம் சுமப்பதும் வம்பு
2 ஆண்டாள் – வாழி திருநாமம் – 2 – அப்பிள்ளை திருவாய் மலர்ந்தருளியது
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே *
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே *
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே *
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே *
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே *
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே *
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே *
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே