016-ThiruVinnagar


Thiru Vinnagar ( Sri Oppiliappan Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
31

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
1

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
2

நம்மாழ்வார் திருவாய்மொழி
11

Total
47

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.1

** வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு பண்டைநம் வினைகெட வென்று * அடிமேல்

தொண்டரு மமரும் பணியநின்று அங்கண்டமொ டகலிட மளந்தவனே *

ஆண்டாயுனைக் கான்பதோ ரருளெனக் கருளுதியேல் *

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.2

அண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக்

கண்டவனே * விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமு

துண்டவெம் பெருமானே * ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக்

கருளுதியேல் * வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.3

குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட தழல்நிற வண்ணன்நண் ணார்நகரம்

விழ * நனி மலைசிலை வளைவுசெய்துஅங் கழல்நிற அம்பது வானவனே *

ஆண்டாயுன்னைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல் *

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.4

நிலவொடு வெயில்நில விருசுடரும் உலகமு முயிர்களு முண்டொருகால் *

கலைதரு குழவியி னுரு வினையாய் அலைகட லாலிலை வளர்ந்தவனே *

ஆண்டாயுனைக்  காண்பதோ ரருளெனக் கருளுதியேல் *

, வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.5

பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம் *

ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்றுஅங் கோரெழுத் தோருரு வானவனே *

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல் *

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.6

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்கெழு முலகமு மாகி * முத

லார்களு மறிவரு நிலையினையாய்ச் சீர்கெழு நான்மறை யானவனே *

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல் *

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.7

உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய் *

பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே *

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல் *

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.8

காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம் *

ஆதலி னுனதடி யணுகுவன் நான் போதலார் நெடுமுடிப் புண்ணியனே *

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல் *

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.9

சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் காதல்செய் யாதுன கழலடைந்தேன் *

ஓதல்செய் நான்மறை யாகியும்பர் ஆதல்செய் மூவுரு வானவனே *

ஆண்டாய் உனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல் *

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.1.10

** பூமரு பொழிலணி விண்ணகர்மேல் *

காமரு சீர்க்கலி கன்றிசொன்ன *

பாமரு தமிழிவை பாடவல்லார் *

வாமனன் அடியிணை மருவுவரே

  

 

  

 

  


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.1

** பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும்

இறுத்தேன் * ஐம்புலன் கட்கட னாயின வாயிலொட்டி அறுத்தேன் *

ஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன் *

நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.2

மறந்தே னுன்னைமுன்னம் மறந் தமதி யின்மனத்தால் *

இறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில் *

பிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா *

சிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.3

மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும் *

ஊனேராக்கை தன்னை உதவாமை யுணர்ந்துணர்ந்து *

வானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த தேனே *

நின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே

  

 

  

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.4

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா

தறிந்தேன் * நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி

எறிந்தேன் * ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து

செறிந்தேன் * நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.5

பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப *

ஆண்டார் வையமெல் லாம் அர சாகி * முன்னாண்டவரே

மாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை வேண்டேன் *

நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.6

கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன் *

மல்லா மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த மல்லா *

மல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த

வில்லா * நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.7

வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய் *

ஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி *

கூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை *

தேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.8

தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல் *

மேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார் *

மூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த

தேவா * நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.9

போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம்

கோதா * கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த

தூதா * தூமொழி யாய்சுடர் போலென் மனத்திருந்த

வேதா * நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே

  

 

  

 

  


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.2.10

** தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை *

வானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன் * மருவார்

ஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார் *

கோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே

  

 

  

 

  


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.1

** துறப்பேன் அல்லேனின் பம்துற வாது * நின்னுருவம்

மறப்பே னல்லேனென் றும்மற வாது * யானுலகில்

பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது * நின்

திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே

  

 

  

 

  


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.2

துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால் *

சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே *

அறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே *

திறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே

  

 

  

 

  


23   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.3

மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும் *

ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன் *

கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்

தேனே * வருபுனல்சூழ் திருவிண் ணகரானே

  

 

  

 

  


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.4

சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத்

தாழ்ந்தேன் * அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன் *

போந்தேன் புண்ணியனே உனையெய்தியென் தீவினைகள்

தீர்ந்தேன் * நின்னடைந்தேன் திருவிண் ணகரானே

  

 

  

 

  


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.5

மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப் பெற்றேன் *

பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான் *

வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச்

செற்றாய் * கொற்றவனே திருவிண் ணகரானே

  

 

  

 

  


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.6

மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும் *

செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை * நெஞ்சில்

உய்யும் வகையுணர்ந்தே உண்மையாலினி * யாது மற்றோர்

தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே

  

 

  

 

  


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.7

வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு

மாறே * நீபணியா தடைநின் திருமனத்து *

கூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு * மற் றோர்தெய்வம்

தேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே

  

 

  

 

  


28   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.8

முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால் *

விளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே *

அளிந்தோர்ந்த சிந்தைநின்பா லடியேற்க்கு * வானுலகம்

தெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே

  

 

  

 

  


29   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.9

சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட

நல்லே னை * வினைகள் நலியாமை நம்புநம்பீ *

மல்லாகுடமாடி மதுசூத னே * உலகில் செல்லா

நல்லிசையாய் திருவிண் ணகரானே

  

 

  

 

  


30   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.10

** தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில் *

சீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை *

காரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை *

ஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே

  

 

  

 

  


31   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.8

** பத்த ராவியைப் பான்மதி யை * அணித்

தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய் *

முத்தி னைமணி யைமணி மாணிக்க

வித்தி னை * சென்று விண்ணகர்க் காண்டுமே

  

 

  

 

  


32   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 29

** அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை *

குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து

வென்றானை * குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்

நின்றானை * தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே

  

 

  

 

  


33   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 72

கணமங்கை  காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் *

சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்

  

 

  
 

 

  


34   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 113

தன்னுலகம் ஆக்குவித்த தாளானை * தாமரைமேல்

மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை

  

 

  
 

 

  


35   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 61

** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *

இளங்குமரன் றன்விண் ணகர்

  

 

  

 

  


36   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 62

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு

  

 

  

 

  


37   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.1

** நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய் *

வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் *

பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை *

செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே

  

 

  

 

  


38   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.2

கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய் *

தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய் *

கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர் *

தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே

  

 

  

 

  


39   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.3

நகரமும் நாடுகளுமு ஞானமும் மூடமும் ஆய் *

நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் *

சிகர மாடங்கள் சூழ் திருவண்ணகர் சேர்ந்த பிரான் *

புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே

  

 

  

 

  


40   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.4

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய் *

எண்ண ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய் *

திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *

கண்ணன் இன் அருளே கண்டு கொள்மின்கள் கைதவமே

  

 

  

 

  


41   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.5

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய் *

மெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய் *

செய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான் *

பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே

  

 

  

 

  


42   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.6

மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய் *

பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய் *

தேவர்மே வித்தெழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான் *

பாவியேன் மனத்தே யுறைகின்ற பரஞ்சுடரே

  

 

  

 

  


43   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.7

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய் *

கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்தும் * விண்ணோர்

சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான் *

வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே

  

 

  

 

  


44   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.8

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்குவெங் கூற்றமுமாய் *

தன்சரண் நிழற்கீ ழுலகம்வைத்தும் வையாதும் *

தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான் *

என்சரணென் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே

  

 

  

 

  


45   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.9

என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய் *

பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய் *

மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன் *

தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே

  

 

  

 

  


46   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.10

நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய் *

சுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய் *

மழலைவாழ் வண்டுவாழ் திருவிண்ணகர் மன்னுபிரான் *

கழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே

  

 

  

 

  


47   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.3.11

** காண்மின்க ளுலகீர் என்று கண்முகப் பேநிமிர்ந்த *

தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

ஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லர் *

கோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர்குரவர்களே