அ |
அறம் செய விரும்பு |
Aram seya virumbu |
தருமம் செய்ய நீ விரும்புவாயாக |
Have desire to do good deeds |
ஆ |
ஆறுவது சினம் |
Aaruvathu sinam |
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும் |
Anger should be controlled |
இ |
இயல்வது கரவேல் |
Iyalvathu karavel |
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு |
Help to your best possible extent |
ஈ |
ஈவது விலக்கேல் |
Eevathu vilakkel |
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை வேண்டாமென்று தடுக்காதே |
Don’t stop someone from doing charity |
உ |
உடையது விளம்பேல் |
Udaiyathu vilambel |
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே |
Do not boast about your possession |
ஊ |
ஊக்கமது கைவிடேல் |
Ookamathu kaividel |
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது |
Do not give up hope/self-confidence |
எ |
எண் எழுத்து இகழேல் |
Enn ezhuthu egazhael |
எண்ணும் எழுத்தும் இன்றியமையாதன, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே |
Do not underestimate the power of learning |
ஏ |
ஏற்பது இகழ்ச்சி |
Yerpathu egazhchi |
யாசித்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது |
To accept alms is a shameful act |
ஐ |
ஐயமிட்டு உண் |
Iyam ittu un |
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும் |
Before eating, share food with those who need |
ஒ |
ஒப்புரவு வொழுகு |
Oppuravu ozhugu |
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள் |
Get along with the world |
ஓ |
ஓதுவது ஒழியேல் |
Odhuvathu ozhiyel |
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு |
Never stop learning |
ஒள |
ஒளவியம் பேசேல் |
Aovviyam pesael |
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே |
Never envy or talk bad about others |
ஃ |
அஃகஞ் சுருக்கேல் |
Ahkham surukael |
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே |
Do not be stingy in selling food grains |