எழில் காஞ்சி நகர் வாழும் ஜகத்குருவே
எளியோர் துயர் தீர்க்கும் என குருவே
அத்வைத கீர்த்தியே அருள் வேத மூர்த்தியே
அருள்வாய் நீ என்றும் ஆனந்த ஸ்பூர்த்தியே
மோகன புன்னகையை மனமின்னும் மறக்கவில்லை
மௌன த்யான நிலையும் கண்களில் கரையவில்லை
அபய ஹஸ்த ஆசி அமைதியை வழங்கி நிற்க
அருள் மொழி சரணங்களும் ஆன்மாவில் உறைந்து நிற்க