Maanikkam Katti


Maanikkam Katti


 

Maanikkam Katti Vayiram Idaikatti

Aanipponnaal Seytha Vanna Siruth Thottil

Peni Unakku Piraman Vidu Thanthaan

Maani Kuralane Thaalelo Vaiyam Alanthaane Thaalelo

 

Otha Kadalin Olimuththin Aaramum

Saathi Pavalamum Santha Sarivalaiyum

Maathakkavenru Varunan Viduthanthaan

Sothi Sudar Mudiyaay Thaalelo Sunthara Tholane Thaalelo

 

Kaanaar Narunthuzaay Kaiseytha Kanniyum

Vaanaar Sezhunj Solai Karpakaththin Vaasikaiyum

Thenaar Malarmel Thirumangai Poththanthaal

Kone Azel Azel Thaalelo Kudanthai Kidanthaane Thaalelo

 


    

மாணிக்கம் கட்டி


 

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணி பொன்னால் செய்த வண்ண சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ

 

ஓத கடலின் ஒளிமுத்தின் ஆரமும்

சாதி பவளமும் சந்த சரிவளையும்

மாதக்க என்று வருணன் விடுதந்தான்

சோதி சுடர் முடியாய் தாலேலோ சுந்தர தோளனே தாலேலோ

 

கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்

வானார் செழுஞ்சோலை கற்பகத்தின் வாசிகையும்

தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்

கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ

 


    

Please leave your valuable suggestions and feedback here