ஓங்கி உலகளந்த உத்தமர் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தெங்காதெ புக்கிருந்து சேர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
Ongi Ulagalandha Uththaman Per Paadi
Naangal Nam Paavaikku Chaatri Neer Aadinaal
Theengindri Naadellam Thingal Mummaari Peythu
Ongu Perunj Chennel Oodu Kayal Ugala
Poonguvalai Pothil Pori Vandu Kan Patuppa
Thengaathe Pukkirunthu Serththa Mulai Patrri
Vaangka Kudam Niraikkum Vallal Perum Pasukkal
Neengkaatha Selvam Niraindhelor Empaavai