Villinaiyoththa Puruvam Valaiththanai Velavaa
Angor Verppu Norungi Podipodi yaanadhu Velavaa
Sollinai Thenir Kuzhaithurai Paal Siru Valliyai
Kandu Sokki Maramena Ninranai Thenmalai Kaattile
Kallinai yoththa Valiya Manam Konda Paadagan
Singan Kannirandayiram Kaakkai Kiraiyitta Velavaa
Pallinai Kaatti Ven Muthathai Pazhithidum Valliyai
Oru Paarppana Kolam Tharithu Karam Thotta Velavaa
Vellalai Kaigalai Kotti Muzhangum Kadalinai
Udal Vembi Marugi Karugi Pughaiya Veruttinaai
Killai Mozhichiru Valliyenum Peyar Selvathai
Enrum Kedatra Vaazhvinai Inba Vilakkai Maruvinai
Kollai Konde Amaraavathi Vaazhvu Kulaithavan
Bhaanu Gopan Thalai Pathu Kodi Thunukkura Kobithaai
Tulli Kulaavi Thiriyum Siruvan Maanaippol
Thinai Thottathileyoru Pennai Manam Konda Velavaa
Aaru Sudar Mugham Kandu Vizhikinbamaagude
Kaiyil Anjalenum Kuri Kandu Magizhchiyundaagude
Neeru Padarkodum Paavam Pini Pashi Yaavaiyum
Ingu Neekki Adiyarai Nithamum Kaathidum Velavaa
Kooru Padappala Kodiyavunarin Koottathai
Kandu Kokkari Tandam Kulunga Nagaithidum Sevalaai
Maaru Padappala Veru Vadivodu Thonruvaal
Engal Vairavi Petra Perumkanale Vadi Velavaa
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா
அங்கொர் வெற்பு நொறிங்கி பொடிப்பொடி யானது வேலவா
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு வள்ளியை
கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலை காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனம்கொண்ட பாதகன்
சிங்கன் கண்ணிரண்டாயிரம் காக்கை கிரையிட்ட வேலவா
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை
ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா
வெள்ளலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை
உடல் வெம்பி மருகி சுருக்கி புகைய வெருட்டினாய்
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும் பெயர் செல்வத்தை
என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய்
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன்
பானு கோபன் தலை பத்து கோடித் துணுக்குறக் கோபித்தாய்
துள்ளி குலாவி் திரியும் சிறுவன் மானைப்போல்
தினைத் தோட்டத்திலேயொரு பெண்ணை மணம் கொண்ட வேலவா
ஆறு சுடர்முகம் கண்டு விழிக்கின்ப மாகுதே
கையில் அஞ்சலெனும் குறி கண்டு மகிழ்ச்சியுண்டாகுதே
நீறு படர்க்கொடும் பாவம் பிணிபசி யாவையும்
இங்கு நீக்கி யடியரை நித்தமும் காத்திடும் வேலவா
கூறு படப்பல கோடி யவுணரின் கூட்டத்தை
கண்டு கொக்கரி தண்டம் குலுங்க நகைதிடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள்
எங்கள் வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா