Vizhi Kidaikkuma Abhaya Karam


விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா

குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது

அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி)


கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்

குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்

நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது உனை

நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)


நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த

சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா

நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் உன் அடியில் வைத்தேன்

உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா (விழி)


    

Please leave your valuable suggestions and feedback here