Kumara Gurupara Muruga Saravana
Guha Shanmuga Kari Pirakaana
Kuzhaga Sivasutha Sivaya Namavena
Kuravan Arulguru Maniye Endru
Amudha Imaiyavar Thimirdha Midukadal
Adhena Anudhinam Unaiyodhum
Amalai Adiyavar Kodiya Vinaikodum
Abhaya Midukural Ariyaayo
Thimira Ezhukadal Ulaga Muripada
Dhisaigal Podipada Varusoorar
Sigara Mudiyudal Bhuviyil Vizhavuyir
Thiraiko Damarporu Mayilveera
Namanai Uyirkolum Azhalin Inaikazhal
Nadhikol Sadaiyinar Gurunaatha
Nalina Gurumalai Maruvi Amartharu
Navilu Marai Pugazh Perumale
குமர குருபர முருக சரவண
குக சண்முக கரி பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவன் அருள்குரு மணியேயென்று
அமுத இமையவர் திமிர்த மிடுகடல்
அதென அநுதினம் உனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடும்
அபய மிடுகுரல் அறியாயோ
திமிர எழுகடல் உலக முறிபட
திசைகள் பொடிபட வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு மயில்வீரா
நமனை யுயிர்கொளும் அழலின் இணைகழல்
நதிகொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி அமர்தரு
நவிலு மறைபுகழ் பெருமாளே