Pakkuva Aachaara Lakshana Saakaadhi
Batshana Maamona Sivayogar
Baththiyil Aaraaru Thaththuva Melveedu
Patru Niraadhaara Nilaiyaga
Akkaname Maaya Dhurgunam Vaeraaga
Appadaiye Gnyaana Upadhesam
Akkara Vaaypesu Sathguru Naathaa Un
Arputha Seerppaadam Maravene
Uggira Veeraaru Meybuyane Neela
Urpala Veerasi Mananaara
Oththa Nilaveesu Niththila Neeraavi
Urpala Raaseeva Vayaloora
Pokkami Laaveera Vikrama Maa Meni
Porprabai Yaakaara Avinaasi
Poykkali Pomaaru Meykkarul Seeraana
Pukkoli Yoormevu Perumaale
பக்குவ ஆசார லட்சண சாகாதி
பட்சண மாமோன சிவயோகர்
பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு
பற்று நிராதார நிலையாக
அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
அப்படையே ஞான உபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதா உன்
அற்புத சீர்பாதம் மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புயனே நீல
உற்பல வீராசி மணநாற
ஒத்த நிலாவீசு நித்தில நீராவி
உற்பல ராசீவ வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார அவிநாசி
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு பெருமாளே