Sandhadham Bandha Thodaraale
Sanchalam Thunji Thiriyaadhe
Kandhanen Drendrutru Unainaalum
Kandukondan Putriduveno
Thandhiyin Kombai Punarvone
Sankaran Pangir Sivaibaalaa
Sendhilang Kandi Kadhirvelaa
Thenparang Kundrir Perumaale
சந்ததம் பந்த தொடராலே
சஞ்சலம் துஞ்சி திரியாதே
கந்தனென் றென்றுற்று உனைநாளும்
கண்டுகொண்டன் புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டி கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே