Thiruneetru Padhigam-TA


திருநீற்றுப் பதிகம்

 

Full Version – பாராயண முறை
   

Ready Reckoner


1   திருநீற்றுப் பதிகம்-1

 

திருச்சிற்றம்பலம்

 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

2   திருநீற்றுப் பதிகம்-2

 

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

3   திருநீற்றுப் பதிகம்-3

 

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

4   திருநீற்றுப் பதிகம்-4

 

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணம் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

5   திருநீற்றுப் பதிகம்-5

 

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

6   திருநீற்றுப் பதிகம்-6

 

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

7   திருநீற்றுப் பதிகம்-7

 

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்து ஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

8   திருநீற்றுப் பதிகம்-8

 

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங்கும் திருமேனி ஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

9   திருநீற்றுப் பதிகம்-9

 

மாலொ டயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

10   திருநீற்றுப் பதிகம்-10

 

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூட

கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு

அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே

 

பாராயண முறை

   

11   திருநீற்றுப் பதிகம்-11

 

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றை

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீர

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

 

திருச்சிற்றம்பலம்

 

பாராயண முறை

   

Please leave your valuable suggestions and feedback here