வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவார் உந்தீபற
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக்கு உந்தீபற
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவார் உந்தீபற
இருபதும் இற்றதென்று உந்தீபற
ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவலென்று உந்தீபற
அதற் கப்பாலும் காவலென்று உந்தீபற
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவார் உந்தீபற
Valainthathu Villu Villainthathu Poosal
Ullainthana Muppuram Undhipara
Orungudan Vendhavaar Undhipara
Eerambu Kandilam Yekampar Thankaiyil
Orambe Muppuram Undhipara
Ondrum Perumigai Undhipara
Thachchu Viduththalum Thamadi Yittalum
Achchu Murindhadhenru Undhipara
Azhinthana Muppuram Undhipara
Saadiya Velvi Sarindhida Devargal
Odiya Vaapaadi Undhipara
Uruththira Naadhanukku Undhipara
Therai Niruththi Malaiyeduth Thaansiram
Eerainthum Itravaar Undhipara
Irubathum Itradenru Undhipara
Yekaasa Mitta Irudigal Pogaamal
Aagaasam Kaavalenru Undhipara
Adhar Kappaalum Kaavalenru Undhipara
Valainthathu Villu Villainthathu Poosal
Ullainthana Muppuram Undhipara
Orungudan Vendhavaar Undhipara