024-Thirukkannapuram


Thirukkannapuram ( Sri Neelamega Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
1

ஆண்டாள் நாச்சியார் திருமொழி
1

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
11

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
100

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
2

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

நம்மாழ்வார் திருவாய்மொழி
11

Total
128

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.5.8

** உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும் *

கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி *

மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே *

என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே

  

 

  

 

  


2   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 4.2

** காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் *

வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன் *

ஓட்ட ராவந்தென் கைப்பற்றி * தன்னோடும்

கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே

  

 

  

 

  


3   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.1

** மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே *

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் * செம்பொஞ்சேர்

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே *

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

  

 

  

 

  


4   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.2

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே *

திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய் *

கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே *

எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ

  

 

  

 

  


5   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.3

கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய் *

தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ *

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே *

எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ

  

 

  

 

  


6   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.4

தாமரைமே லயனவனைப் படைத்தவனே * தசரதன்றன்

மாமதலாய் மைதிலிதன் மணவாளா * வண்டினங்கள்

காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே *

ஏமருவும் சிலைவலவா! இராகவனே தாலேலோ

  

 

  

 

  


7   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.5

பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி *

ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே *

சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே *

தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ

  

 

  

 

  


8   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.6

சுற்றம் எல்லாம் பின் டிதாடரத் தொல் கானம் அடைந்தவனே *

அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே *

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே *

சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ

  

 

  

 

  


9   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.7

ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே *

வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே *

காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே *

ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ

  

 

  

 

  


10   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.8

** மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே *

அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே *

கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே *

சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ

  

 

  

 

  


11   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.9

தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய் *

வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே *

களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே *

இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ

  

 

  

 

  


12   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.10

** தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே *

யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே *

காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே *

ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ

  

 

  

 

  


13   குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி – 8.11

** கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்

தன்னடிமேல் * தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை *

கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன *

பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே

  

 

  

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.1

** சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண்சங்கம் என்கின் றாளால் *

மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் கெற்றேகாண் என்கின் றாளால் *

முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின் றாளால் *

கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.2

** செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால் *

பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால் *

ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் றாளால் *

கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.3

துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல்  தோன்றுமால் என்கின் றாளால் *

மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால் *

பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால் *

கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.4

தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால் *

போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால் *

ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால் *

கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.5

அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால் *

முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால் *

வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால் *

கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.6

பேரா யிரமுடைய பேராளன் பேராளன் என்கின் றாளால் *

ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின் றாளால் *

நீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால் *

காரார் வயலமரும் கண்ணபுரத்  தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.7

செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால் *

அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால் *

மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால் *

கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.8

கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின் றாளால் *

வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின் றாளால் *

பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின் றாளால் *

கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.9

வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின் றாளால் *

உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின் றாளால் *

பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின் றாளால் *

கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ

  

 

  

 

  


23   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.1.10

** மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று *

காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன *

பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார் *

பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே

  

 

  

 

  


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.1

** தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் *

வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர் *

துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ *

கைவளை கொள்வது தக்கதே

  

 

  

 

  


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.2

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் *

காணுமோ கண்ண புரமென்று காட்டினாள் *

பாணனார் திண்ண மிருக்க இனியிவள்

நாணுமோ * நன்றுநன் றுநறை யூரர்க்கே

  

 

  

 

  


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.3

** அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்

வெருவினாள் * மெய்யம் வினவி யிருக்கின்றாள் *

பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்

உருகினாள் * உள்மெலிந் தாள்இது வென்கொலோ

  

 

  

 

  


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.4

உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை *

பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான் *

கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்

வண்ணர்மேல் * எண்ண மிவட்கிது வென்கொலோ

  

 

  

 

  


28   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.5

கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை *

பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள் *

வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள் *

வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே

  

 

  

 

  


29   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.6

வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம் *

இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் *

மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்

கடவதென் * கண்டுயி லின்றிவர் கொள்ளவே

  

 

  

 

  


30   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.7

தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும் *

இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள் *

துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர் *

அரங்கமே என்ப திவள்தனக் காசையே

  

 

  

 

  


31   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.8

தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா

கண்டு * தான் கணபுரம் கைதொழப் போயினாள் *

வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்

கொண்டுதான் * கோயின்மை செய்வது தக்கதே

  

 

  

 

  


32   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.9

முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா *

தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன் *

கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்

பிள்ளையை * பிள்ளையென் றெண்ணப் பெறுவரே

  

 

  

 

  


33   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.10

** கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை *

பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல் *

சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர் *

நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே

  

 

  

 

  


34   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.1

** கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும் *

திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும் *

விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர *

வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே

  

 

  

 

  


35   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.2

அரிவிரவு முகிற் கணத்தா னகில்புகையால் வரையோடும் *

தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும் *

வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண் *

கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே

  

 

  

 

  


36   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.3

துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகை * போம்

திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும் *

பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த *

செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே

  

 

  

 

  


37   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.4

கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில் *

திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும் *

மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் * உரலோடும்

புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே

  

 

  

 

  


38   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.5

வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள் *

தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும் *

தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் * தயிருண்ட

வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே

  

 

  

 

  


39   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.6

மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம் *

திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும் *

அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால் *

உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே

  

 

  

 

  


40   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.7

வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம் *

தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும் *

எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும் *

உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே

  

 

  

 

  


41   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.8

கொங்குமலி கருங்குவளை கண்ணாக * தெண்கயங்கள்

செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும் *

வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்ற *

செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே

  

 

  

 

  


42   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.9

வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை *

சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும் *

பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல் *

பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே

  

 

  

 

  


43   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.3.10

** தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்

வாமனனை * மறிகடல்சூழ் வயலாலி வளநாடன் *

காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை *

நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே

  

 

  

 

  


44   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.1

** விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன் *

மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர் *

கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல் *

வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


45   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.2

வேத முதல்வன் விளங்கு புரிநூலன் *

பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி *

காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான் *

தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


46   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.3

விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி *

அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும் *

கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான் *

வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


47   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.4

நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய் *

சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி *

கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான் *

தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


48   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.5

ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி *

பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள் *

காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான் *

தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


49   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.6

மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன் *

பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி *

காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல் *

தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


50   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.7

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் *

தார்மன்னு தாச ரதியாய தடமார்வன் *

காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான் *

தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


51   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.8

நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில் *

சால மலரெல்லா மூதாதே * வாளரக்கர்

காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல் *

கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


52   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.9

நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன் *

அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான் *

கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல் *

கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


53   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.4.10

** வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன் *

கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை *

கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை *

தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ

  

 

  

 

  


54   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.1

** தந்தை காலில் விலங்கறவந்து தோன்றிய தோன்றல்பின் * தமியேன்றன்

சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறுமள விருந்தேனை *

அந்தி காவலனமுதுறு பசுங்கதி ரவைசுட அதனோடும் *

மந்த மாருதம் வனமுலை தடவந்து வலிசெய்வ தொழியாதே

  

 

  

 

  


55   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.2

மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வரைபுரை திருமார்பில் *

தாரி னாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன் *

ஊரும் துஞ்சிற்றுலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும் *

தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன் றறியேனே

  

 

  

 

  


56   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.3

ஆயன் மாயமே யன்றிமற் றென்கையில் வளைகளும் இறைநில்லா *

பேயின் ஆருயி ருண்டிடும் பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ *

தூய மாமதிக் கதிர்ச்சுடத் துணையில்லை இணைமுலை வேகின்றதால் *

ஆயன் வேயினுக் கழிகின்ற துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே

  

 

  

 

  


57   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.4

கயங்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில் *

மயஙகவெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும் வந்திலன் மறிகடல்நீர் *

தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல் *

இயங்கு மாருதம் விலங்கிலென் ஆவியை எனக்கெனப் பெறலாமே

  

 

  

 

  


58   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.5

ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த

ஆழி யான் * நமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால் *

தோழி நாமிதற் கென்செய்தும் துணையில்லை சுடர்படு முதுநீரில் *

ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அந்திவந் தடைகின்றதே

  

 

  

 

  


59   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.6

முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின் *

வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன் *

எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா *

கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே

  

 

  

 

  


60   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.7

கலங்க மாக்கடல் கடைந்தடைத் திலங்கையர் கோனது வரையாகம் *

மலங்க வெஞ்சமத் தடுசரம் துரந்தவெம் மடிகளும் வாரானால் *

இலங்கு வெங்கதி ரிளமதி யதனொடும் விடைமணி யடும் * ஆயன்

விலங்கல் வேயின தோசையு மாயினி விளைவதொன் றறியேனே

  

 

  

 

  


61   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.8

முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி *

மழுவி னால்மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் *

ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்கவஞ் சிறைகோலி *

தழுவு நள்ளிருள் தனிமையிற் கடியதோர் கொடுவினை யறியேனே

  

 

  

 

  


62   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.9

கனஞ்செய் மாமதிள் கணபுரத் தவனொடும் கனவினி லவன்தந்த *

மனஞ்செ யின்பம்வந் துள்புக வெள்கியென் வளைநெக இருந்தேனை *

சினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும் *

அனந்த லன்றிலின் அரிகுரல் பாவியே னாவியை யடுகின்றதே

  

 

  

 

  


63   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.5.10

** வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து *

ஆர்வத் தாலவர் புலம்பிய புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த *

கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி யொலிவல்லார் *

ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே

  

 

  

 

  


64   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.1

** தொண்டீர் உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் *

திண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன் *

வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டான் *

கண்டு கொண்டு கந்த கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


65   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.2

பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து *

பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை *

இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப *

கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


66   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.3

வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை *

அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான் *

வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை *

கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


67   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.4

மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து *

கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று *

தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ *

கல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


68   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.5

ஆமை யாகி அரியாகி அன்ன மாகி * அந்தணர்தம்

ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி *

சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து * முன்

காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


69   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.6

வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா * முன்

திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள் *

பெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி * முன்

கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


70   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.7

இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு *

கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான் *

அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி * முன்

கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


71   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.8

மாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ * வலிமிக்க

காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும் *

மாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து *

காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


72   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.9

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக *

வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன் *

சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து *

கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே

  

 

  

 

  


73   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.6.10

** கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை *

திருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன் *

மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார் *

இருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே

  

 

  

 

  


74   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.1

** வியமுடை விடையினம் உடைதர மடமகள் *

குயமிடை தடவரை யகலம துடையவர் *

நயமுடை நடையனம் இளையவர் நடைபயில் *

கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே

  

 

  

 

  


75   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.2

இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து *

துணைமலி முலையவள் மணமிகு கலவியுள் *

மணமலி விழவினொ டடியவர் அளவிய *

கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


76   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.3

புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை *

மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர் *

முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல் *

கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


77   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.4

ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய் *

போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர் *

கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் *

காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


78   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.5

தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ *

அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து *

விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ *

கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


79   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.6

மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில் *

தழுவிய உருவினர் திருமகள் மருவிய *

கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண் *

எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


80   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.7

பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம் *

எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர் *

சுருதியொ டருமறை முறைசொலு மடியவர் *

கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


81   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.8

படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு *

கொடிபுல்கு தடவரை அகலம துடையவர் *

முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர் *

கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


82   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.9

புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய *

நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும் *

வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை *

கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே

  

 

  

 

  


83   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.7.10

** மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை *

வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர் *

கலியன தமிழிவை விழுமிய இசையினொடு *

ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே

  

 

  

 

  


84   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.1

** வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் * வலியுருவில்

மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன் *

ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள் *

கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


85   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.2

மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு *

இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய் *

விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை *

கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


86   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.3

பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம் * வளைமருப்பில்

ஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை *

கூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும் *

காரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


87   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.4

உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து *

விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து *

பிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து *

களஞ்செய் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


88   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.5

தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால் *

முழுநீர் வையம் முன்கொண்டமூவா வுருவி னம்மானை *

உழுநீர் வயலுள் பொ ன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும் *

கழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


89   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.6

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால் *

படியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை *

குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் *

கடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


90   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.7

வைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி *

வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து *

செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும் *

கைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


91   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.8

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான்தோன்றி *

வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற் செல்ல வெஞ்சமத்து *

செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் மில்லிருப்ப *

கற்ற மறையோர் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


92   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.9

துவரிக் கனிவாய் நிலமங்கை துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள் *

இவரித் தரசர் தடுமாற இருள்நாள் பிறந்த அம்மானை *

உவரி யோதம் முத்துந்த ஒருபா லொருபா லொண்செந்நெல் *

கவரி வீசும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே

  

 

  

 

  


93   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.8.10

** மீனோ டாமை கேழலரி குறளாய் முன்னு மிராமனாய்த்

தானாய் * பின்னு மிராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும்

ஆனான் றன்னை * கண்ணபுரத் தடியேன் கலிய னொலிசெய்த *

தேனா ரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே

  

 

  

 

  


94   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.1

** கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை *

மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை *

எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்

அம்மானை * அடியே னடைந்துய்ந்து போனேனே

  

 

  

 

  


95   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.2

தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார் *

வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில் *

திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த

பெருமானை * அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே

  

 

  

 

  


96   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.3

** விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற *

படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி *

மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்

றுடையானுக்கு * அடியேன் ஒருவர்க் குரியேனோ

  

 

  

 

  


97   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.4

** மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை * என்னுள்

புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை *

தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த *

அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே

  

 

  

 

  


98   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.5

வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை *

எந்தாய் போயறியாய் இதுவே யமையாதோ *

கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த

மைந்தா * உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே

  

 

  

 

  


99   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.6

எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு *

அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை *

நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய் *

மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே

  

 

  

 

  


100   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.7

பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு *

உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை * ,

முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை *

எத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே

  

 

  

 

  


101   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.8

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே *

பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை *

வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்

பெற்றேன் * பெற்றதும் பிறவாமை பெற்றேனே

  

 

  

 

  


102   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.9

** கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் *

தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் *

விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை *

கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ

  

 

  

 

  


103   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.10

** செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன் *

கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை *

இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர் *

வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே

  

 

  

 

  


104   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.1

** வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம்

உண்டானே * உன்னை யுகந்துகந் துன்றனக்கே

தொண்டானேற்கு * என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம்

கண்டானே * கண்ண புறத்துறை யம்மானே

  

 

  

 

  


105   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.2

பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும் *

ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால் *

வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்

கருதேன்நான் * கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


106   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.3

** மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ

டுற்றிலேன் * உற்றது முன்னடி யார்க்கடிமை *

மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும்

கற்று * நான் கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


107   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.4

பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல் *

உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான் *

மண்ணாளா வாள்நெடுங் கண்ணி மதுமலராள்

கண்ணாளா * கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


108   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.5

பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான் *

மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன் *

உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய் *

கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


109   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.6

ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை *

பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது *

சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ

காத்திபோல் * கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


110   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.7

வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல் *

துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே *

வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்

கள்ளர்போல் * கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


111   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.8

மாணாகி வைய மளந்ததுவும் * வாளவுணன்

பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன் *

பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்

காணேன்நான் * கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


112   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.9

நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக *

மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை *

பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை

காட்டினாய் * கண்ண புரத்துறை யம்மானே

  

 

  

 

  


113   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.10.10

** கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை *

கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை *

பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும் *

அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே

  

 

  

 

  


114   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 16

** கன்றுமேய்த் தினிதுகந்த காளாய் என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே என்றும் *

மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும் *

வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர்  நின்றாய் என்றும் *

துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே

  

 

  

 

  


115   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 27

** செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு *

என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை * நாளும்

பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன் * தந்தால்

இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே

  

 

  

 

  


116   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 72

கணமங்கை  

காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் *

சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்

  

 

  
 

 

  


117   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 90,133

என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும் *

மன்னு மலர்மங்கை மைந்தன் * கணபுரத்து

———————–

நான்வணங்கும்

கண்ணனைக் கண்ண புரத்தானை * தென்னறையூர்

மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை

  

 

  
 

 

  


118   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.1

** மாலைநண்ணித் தொழுதெழுமினோவினைகெட *

காலைமலை கமலமலரிட்டுநீர் *

வேலைமோதும்மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து *

ஆலின்மேலாலமர்ந்தான் அடியிணைகளே

  

 

  

 

  


119   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.2

கள்ளவிழும்மலரிட்டு நீரிறைஞ்சுமின் *

நள்ளிசேரும்வயலசூழ் கிடங்கின்புடை *

வெள்ளியேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுர

முள்ளி * நாளுந்தொழுதேழுமினோதொண்டரே

  

 

  

 

  


120   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.3

தொண்டர்நுந்தம் துயர்போகநீரேகமாய் *

விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின் *

வண்டுபாடும்பொழில் சூழ் திருக்கண்ணபுரத்

தண்டவாணன் * அமரர்பெருமானையே

  

 

  

 

  


121   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.4

மானை நோக்கி மடப்பின்னைதன்கேள்வனை *

தேனைவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின் *

வானையுந்துமதிள்சூழ் திருக்கண்ணபுரம் *

தானயந்தபெருமான் சரணாகுமே

  

 

  

 

  


122   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.5

சாணாமாகும் தனதாளா டைந்தார்க் கெல்லாம் *

மரணமானால் வைகுந்தம்கொடுக்கும்பிரான் *

அரணமைந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்

தரணியாளன் * தனதண்டர்க்சன்பாகுமே

  

 

  

 

  


123   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.6

அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *

செம்போனாகத்து அவணனுடல்கீண்டவன் *

நன்போனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்

தன்பன் * நாளும் தனமெய்யர்க்கு மெய்யனே

  

 

  

 

  


124   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.7

மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம் *

பொய்யனாகும் புறமேதொழுவார்க்கெல்லாம் *

செய்யில்வாளையுகளும் திருக்கண்ணபுரத்

தையன் * ஆகத்தணைப்பார்கட்கணியனே

  

 

  

 

  


125   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.8

அணியனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *

பிணியும் சாரா பிறவிகெடுந்தாளும் *

மணிபொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்

பணிமின் * நாளும்பரமேட்டிதன்பாதமே

  

 

  

 

  


126   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.9

பாதநாளும்பணியத் தணியும்பிணி *

ஏதாம் எனக்கேலினியென்குறை *

வேதநாவர்விரும்பம் திருக்கண்ணபுரத் தாதியானை *

அடைந்தார்க் கல்லலில்லையே

  

 

  

 

  


127   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.10

இல்லையல்லல் எனக்கேலினியென்குறை *

அல்லிமாதரமரும் திருமார்பினன் *

கல்லிலேய்ந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல *

நாளும்துயர் பாடுசாராவே

  

 

  

 

  


128   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.10.11

** பாடுசாராவினை பற்றறவேண்டுவீர் *

மாடநீடு குருகூர்ச்சடகோபன் * சொல்

பாடலானதமிழ் ஆயிரத்துளிப்பத்தும்

பாடியாடி * பணிமினவன் தாள்களே