காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம்
கருத்துடன் ஜெபித்தால் நினைத்தது கைகூடும்
சத்குருவான சந்திரசேகர சரஸ்வதியை
குருவே நமோ என்று ஜெபித்திடுவோம் நாமே
குருவின் அருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்
திருவின் அருள் இருந்தால் நன்மைகள் பயக்கும்
குருவும் திருவும் ஒன்றேன்று அறிந்தே
குருவை சரணடைந்து ஜெபித்திடுவோம் நாமே
