கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்து அருளாயே
