உந்து மதகளிற்றன் * ஓடாத தோள்வலியன் *
நந்தகோ பாலன் * மருமகளே நப்பின்னாய் *
கந்தம் கமழும் * குழலி கடைதிறவாய் *
வந்துஎங்கும் கோழி * அழைத்தனகாண் மாதவி *
பந்தல்மேல் பல்கால் * குயிலினங்கள் கூவினகாண் *
பந்துஆர் விரலிஉன் * மைத்துனன் பேர்பாடச் *
செந்தா மரைக்கையால் * சீரார் வளைஒலிப்ப *
வந்து திறவாய் * மகிழ்ந்தேலோர் எம்பாவாய். *
Undhu Madha Kalitran Odaadha Thol Valiyan
Nandha Gopalan Marumagale Nappinnaay
Kandham Kamazhum Kuzhali Kadai Thiravaay
Vandhu Engum Kozhi Azhaiththana Kaan Maadhavi
Pandhal Mel Pal Kaal Kuyilinangal Koovina Kaan
Pandhu Aar Virali Un Maiththunan Per Paada
Chendhaamarai Kaiyaal Seeraar Valai Olippa
Vandhu Thiravaay Magizhndhelor Embaavaay