Vadavaraiyai Maththaakki


 

Vadavaraiyai Maththaakki Vaasukiyai Naanaakki

Kadalvannan Pandu Orunal Kadalvayiru Kalakkinaiye

Kalakkiyakai Asodhaiyaar Kadaikayirraal Kattunkai

Malarkkamala Undhiyai Mayamo Marutkaiththe

 

Aruporul Ivanenre Amararganam Thozhudeththa

Urupasi Onru Inriye Ulagu Adaiya Undanaiye

Undavaay Kalavinaal Urivennai Undavaay

Vanthuzhaay Maalaiyay Maayamo Marutkaiththe

 

Thirandu Amarar Thozhudhu Yeththum Thirumaal Ninsengamala

Irandadiyaan Moovulagum Irultheera Nadandhanaiye

Nadandha Adi Panjavarkku Thoodhaaga Nadandha Adi

Madangalaay Maaru Attaay Maayamo Marutkaiththe

 

Moovulagum Eeradiyaan Murainirambaa Vagaimudiya

Thaaviya Sevadiseppa Thambiyodum Kaanpondhu

Cho Aranum Pormadiya Thol Ilangai Kattazhiththa

Sevakanseer Kelaadha Seviyenna Seviye

Thirumalseer Kelaadha Seviyenna Seviye

 

Periyavanai Mayavanai Perulagam Yellam

Virikamala Undhiyudai Vinnavanai Kannum

Thiruvadiyum Kaiyum Thiruvaayum Seyya

Kariyavanai Kaanadha Kan Yenna Kanne

Kan Imaiththu Kaanbaartham Kan Yenna Kanne

 

Madamthaazhum Nenjaththu Kanjchanaar Vanjam

Kadandhaanai Noorruvar Paal Naarrisaiyum Porra

Padarndhu Aaranam Muzhanga Panjchavarkku Thoodhu

Nadandhaanai Yeththaadha Naa Yenna Naave

Naaraayanaa Yennaa Naa Yenna Naave


    

 

வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி

கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை

மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

 

அறுபொருள் இவனென்றே அமரர்கணம் தொழுதேத்த

உறுபசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே

உண்டவாய் களவினால் உறிவெண்ணை உண்டவாய்

வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

 

திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின்செங்கமல

இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

நடந்த அடி பஞ்சவர்க்கு தூதாக நடந்த அடி

மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே

 

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடிய

தாவிய சேவடிசேப்ப தம்பியொடும் கான்போந்து

சோ அரணும் போர்மடிய தொல் இலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே

 

பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனை கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனை காணாத கண் என்ன கண்ணே

கண் இமைத்து காண்பார் தம் கண் என்ன கண்ணே

 

மடம்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற

படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்கு தூது

நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே

நாராயணா என்னா நா என்ன நாவே


    

Please leave your valuable suggestions and feedback here