Thiru arangam ( Srirangam – Sri Ranganathaswamy Temple )
Azhwar | Paasuram | Count | Video | Audio |
---|---|---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | |||
ஆண்டாள் | நாச்சியார் திருமொழி | |||
குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி | |||
திருமழிசை ஆழ்வார் | திருச்சந்த விருத்தம் | |||
திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | |||
தொண்டரடிப் பொடியாழ்வார் | திருமாலை | |||
தொண்டரடிப் பொடியாழ்வார் | திருப்பள்ளியெழுச்சி | |||
திருப்பாணாழ்வார் | அமலனாதிபிரான் | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
திருமங்கையாழ்வார் | திருக்குறுந்தாண்டகம் | |||
திருமங்கையாழ்வார் | திருநெடுந்தாண்டகம் | |||
திருமங்கையாழ்வார் | சிறிய திருமடல் | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | |||
பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி | |||
பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி | |||
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | |||
நம்மாழ்வார் | திருவிருத்தம் | |||
நம்மாழ்வார் | திருவாய்மொழி | |||
கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள் *
உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய் *
திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய் *
மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்
|
|
|
சீமா லிகனவ னோடு தோழமை கொள்ளவும் வல்லாய் *
சாமாறு அவனைநீ யெண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய் *
ஆமா றறியும் பிரானே அணியரங் கத்தே கிடந்தாய் *
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்
|
|
|
** வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ் வருபுனல் காவிரித் தென்ன ரங்கன் *
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான்விட்டு சித்தன் பாடல் *
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன்அடி யார்க ளாகி *
எண்திசைக் கும்விளக் காகி நிற்பார் இணையடி என்தலை மேல னவே
|
|
|
கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம் *
மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து *
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன் *
என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா
|
|
|
** மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை *
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் *
தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும் *
போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே
|
|
|
பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் *
இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர் *
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார் *
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே
|
|
|
மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் *
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் *
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை *
பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே
|
|
|
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு *
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய *
கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர் *
தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே
|
|
|
பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை *
உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண் பெறுத்தானூர் *
குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ் *
திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே
|
|
|
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே *
ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் *
தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து *
யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே
|
|
|
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய *
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர் *
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு *
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே
|
|
|
வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் *
எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் *
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி *
மல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே
|
|
|
குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல் *
நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர் *
குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி *
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே
|
|
|
** பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை *
செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல் *
திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு *
இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே
|
|
|
** மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழ *
செருவுடைய திசைக்கருமம்திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில் *
திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்று *
உருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளிய ரங்கமே
|
|
|
** தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல் *
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும் *
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த *
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே
|
|
|
கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும் *
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான் *
இருளகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி *
அருள்கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வா னமருமூர் அணிய ரங்கமே
|
|
|
பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்ய * துவரை யென்னும்
அதில்நா யகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் *
புதுநாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான் *
பொதுநா யகம்பாவித்து இருமாந்து பொன்சாய்க்கும் புனல ரங்கமே
|
|
|
ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய் அவனியாய் அருவ ரைகளாய் * நான்முகனாய்
நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானு மானான் *
சேமமுடை நாரதனார் சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில் *
பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ்குழறும் புனல ரங்கமே
|
|
|
மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களையே மன்ன ராக்கி *
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் *
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் *
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய் நிற்கின்ற திருவ ரங்கமே
|
|
|
குறட்பிரம சாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி *
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில் *
எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல
அரவணையின்வாய் * சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே
|
|
|
உரம்பற்றி இரணியனை உகிர்நுதியால் ஒள்ளியமார் புறைக்க வூன்றி *
சிரம்பற்றி முடியிடியக் கண்பிதுங்க வாயலரத் தெழித்தான் கோயில் *
உரம்பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடிபோல் உயர்ந்து காட்ட *
வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ண ரங்கமே
|
|
|
தேவுடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய் * மூவுருவி
லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
முடிப்பாங் கோயில் * சேவலொடு
பெடையன்னம் செங்கமல மலரேறி
ஊச லாடி * பூவணைமேல் துதைந்தெழுசெம்
பொடியாடி விளையாடும் புனல ரங்கமே
|
|
|
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செய்யும் நாந்தக மென்னும்
ஒருவாளன் * மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன் *
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழுலகப் பெரும்புர வாளன் *
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவ ரங்கமே
|
|
|
** கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப் படையுடையான் கருதும் கோயில் *
தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம் திருப்ப தியின்மேல் *
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்ததமி ழுரைக்க வல்லார் *
எஞ்ஞான்றும் எம்பெருமா னிணையடிக்கீழ் இணைபிரியா திருப்பர் தாமே
|
|
|
** துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே *
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால் *
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன் *
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தி னானே *
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்த மர்கள் *
போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை *
ஆமிடத் தேஉன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது *
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே *
சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே *
முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயோ *
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற *
அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி *
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை *
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய் *
ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர் *
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய் *
எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் * அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே *
எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா *
வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது *
அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு * இந்த
ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன் *
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னே * என்
ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவ னேஎம் மானே *
அன்று முதல்இன் றறுதி யாக ஆதியஞ் சோதி மறந்த றியேன் *
நன்றும் கொடிய நமன்த மர்கள் நலிந்து வலிந்துஎன்னைப் பற்றும் போது *
அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
|
|
|
** மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும் *
ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை *
வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை
பத்தும் * தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே
|
|
|
** தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ *
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர் *
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர் *
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
|
|
|
எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர் *
குழலழகர் வாயழகர் கண்ணழகர் * கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் * என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே
|
|
|
** பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் *
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான் *
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார் *
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே
|
|
|
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார் *
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற *
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல் *
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே
|
|
|
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று *
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான் *
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான் *
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே
|
|
|
கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் * காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார் *
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது * நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே
|
|
|
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து *
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம் *
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார் *
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே
|
|
|
** பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு * பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் *
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் *
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
|
|
|
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் *
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து *
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த *
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே
|
|
|
** செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த *
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் *
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல் *
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே
|
|
|
** இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த *
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி *
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் *
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே
|
|
|
** வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ *
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ் *
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே
|
|
|
எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு *
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற * செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே
|
|
|
மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணை * வன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினை * அவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே
|
|
|
இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த *
துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த *
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே
|
|
|
அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும் *
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும் *
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் *
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே
|
|
|
மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்
துறந்து * இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான *
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே
|
|
|
கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் *
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப *
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் *
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே
|
|
|
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி *
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி * நாளும்
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் *
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே
|
|
|
** வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய *
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ *
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து * அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே
|
|
|
** திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் *
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் *
குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த *
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே
|
|
|
** தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத் * திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய் *
ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம் *
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே
|
|
|
தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும் * சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து *
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் * கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே
|
|
|
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய் *
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி * வண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம் *
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே
|
|
|
தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு *
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன ரங்கனுக்கடி யார்களாய் *
நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்தி * இன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே
|
|
|
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன் *
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம் *
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய் *
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே
|
|
|
ஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான் *
பாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட *
தீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே *
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே
|
|
|
காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய் *
ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை *
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால் *
வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே
|
|
|
மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய் *
மாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை *
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே *
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே
|
|
|
மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று *
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் தாடிப்பாடியி றைஞ்சி * என்
அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி * அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும் பித்தரே
|
|
|
** அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம் *
எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம் *
கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன் *
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே
|
|
|
** மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் *
இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான் *
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் *
மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே
|
|
|
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும் *
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான் *
ஆலியா அழையா அரங்கா வென்று *
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே
|
|
|
மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும் *
பாரி னாரொடும் கூடுவ தில்லையான் *
ஆர மார்வ னரங்க னனந்தன் * நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே
|
|
|
உண்டி யேயுடை யேயுகந் தோடும் * இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான் *
அண்ட வாண னரங்கன் * வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே
|
|
|
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய் *
நீதி யாரொடும் கூடுவ தில்லையான் *
ஆதி ஆய னரங்கன் * அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே
|
|
|
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன் *
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன் *
தம்பி ரானம ரர்க்கு * அரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே
|
|
|
எத்தி றத்திலும் யாரொடும் கூடும் * அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் *
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் *
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே
|
|
|
பேய ரேயெனக் கியாவரும் * யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென் *
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் *
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே
|
|
|
** அங்கை யாழி யரங்க னடியிணை * தங்கு
சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய் *
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல் *
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே
|
|
|
** தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே *
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே *
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே *
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ
|
|
|
அரங்கனே தரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ் *
மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய் *
நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார் *
குரங்கையா ளுகந்தவெந்தை கூறுதேற வேறிதே
|
|
|
** கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு வுனி வுன் *
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர் *
நண்டை உண்டு நாரை யோ வாளை பாய நீலமே *
அண்டை கொண்டு கெண்டை மேயுமு அந்தண் நீர்அரங்கமே
|
|
|
வெண்திரைக் கருங்கடல் சிவந்துவேவ முன் ஒர் நாள் *
திண்திறற் சிலைக்கைவாளி விட்டவீரர் சேரும் ஊர் *
எண் திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்த நீர் *
வண்டுஇரைத்த சோலை வேலி மன்னுசீர் அரங்கமே
|
|
|
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் *
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் *
பரந்துபொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் *
அரங்கம் என்பர் நான்முகத்து அயன்பணிந்த கோயிலே
|
|
|
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப் *
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் *
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர் *
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே
|
|
|
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான் *
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோட * வாண னாயிரம் கரங்கழித்த வாதிமால் *
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே
|
|
|
இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன் *
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம் *
குலைத்தலைத்தி றுத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு *
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே
|
|
|
மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய் *
பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும் *
உன்னபாத மென்னசிந்தை மன்னவைத்து நல்கினாய் *
பொன்னிசூ ழரங்கமேய புண்டரீக னல்லையே
|
|
|
சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே *
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே *
கரும்பிருந்த கட்டியேக டல்கிடந்த கண்ணனே *
இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே
|
|
|
** பொன்னிசூழ ரங்கமேய பூவைவண்ணமாயகேள் *
என்னதாவி யென்னும் வல்வினையினுள்கொ ழுந்தெழுந்து *
உன்னபாத மென்னநின்ற வொண்சுடர்க்கொ ழுமலர் *
மன்னவந்து பூண்டுவாட்ட மின்றுயெங்கும் நின்றதே
|
|
|
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும் *
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார் * ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை * அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு
|
|
|
அவனென்னை யாளி அரங்கத்து * அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான் * அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே *
வெள்ளத் தரவணையின் மேல்
|
|
|
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *
நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *
அணைப்பார் கருத் தனா வான்
|
|
|
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று * நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை * கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே * உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்
|
|
|
** காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து *
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே *
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற *
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே
|
|
|
** பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண் *
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் *
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் *
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே
|
|
|
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும் *
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு *
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் *
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே
|
|
|
மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால் *
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான் *
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய *
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே
|
|
|
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு *
உண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து *
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி *
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்குமாறே
|
|
|
மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு *
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர் *
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே *
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே
|
|
|
புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம் *
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம் *
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா *
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான்
|
|
|
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் * நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி *
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே *
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே
|
|
|
மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள் *
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர் *
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை *
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே
|
|
|
நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே *
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம் *
கேட்டிரே நம்பி மீர்காள் கெருடவா கனனும் நிற்க *
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே
|
|
|
ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய *
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார் *
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா *
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே
|
|
|
நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க *
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி *
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர் *
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே
|
|
|
எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம் *
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த *
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில் *
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே
|
|
|
** வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை *
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா *
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே
|
|
|
மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல *
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான் *
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை *
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே
|
|
|
சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம் *
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை *
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து * தன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூ ரரங்க மன்றே
|
|
|
விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை *
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம் *
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே
|
|
|
இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே *
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான் *
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள் *
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே
|
|
|
** குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி *
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி *
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு *
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே
|
|
|
பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட *
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும் *
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும் *
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே
|
|
|
பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு *
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய் *
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில் *
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே
|
|
|
பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது *
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன் *
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால் *
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்
|
|
|
கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு *
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள் *
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் *
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே
|
|
|
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள் *
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டும் *
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய் *
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே
|
|
|
குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை *
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன் *
களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறு கின்றேன் *
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே
|
|
|
போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன் *
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன் *
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே *
ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே
|
|
|
குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி *
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன் *
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் *
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே
|
|
|
உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி *
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார் *
நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா *
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே
|
|
|
ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை *
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி *
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன் *
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே
|
|
|
மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை *
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா *
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா *
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே
|
|
|
தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன் *
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன் *
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன் *
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே
|
|
|
ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள் *
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும் *
மார்க்கமொன் றறிய மாட்டா மனிசரில் துரிச னாய *
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே
|
|
|
மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு *
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன் *
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால் *
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே
|
|
|
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு *
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று *
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே
|
|
|
தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய் *
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே *
ஆவியேஅமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய் *
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே
|
|
|
மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே *
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு *
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே * உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே
|
|
|
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும் *
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார் *
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார் *
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே
|
|
|
** மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து *
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி *
காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து * வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே
|
|
|
அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில் *
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும் *
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும் *
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே
|
|
|
திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து *
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம் *
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும் *
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே
|
|
|
வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில் *
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில் *
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும் *
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே
|
|
|
பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள் *
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில் *
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க *
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே
|
|
|
அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி *
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும் *
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில் * ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே
|
|
|
** பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான் *
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப *
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா * உன்னை யென்னோ களைகணாக் கருது மாறே
|
|
|
** வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள் *
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை *
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல் *
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே
|
|
|
** கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் *
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி *
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் *
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக் கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ *
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம் ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி *
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்
கனுங்கி * அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி *
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின் *
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ *
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே
|
|
|
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் *
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை *
வாட்டிய வரிசிலை வானவ ரேறே மாமுனி வேள்வியைக் காத்து * அவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி *
கலந்தது குணதிசை கனைகட லரவம் களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த *
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா *
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ இறையவர் பதினொரு விடையரு மிவரோ *
மருவிய மயிலின னறுமுக னிவனோ மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி *
புரவியோ டாடலும் பாடலும் தேரும் குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம் *
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ *
இந்திர னானையும் தானும்வந் திவனோ எம்பெரு மானுன் கோயிலின் வாசல் *
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா *
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர் *
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி *
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
** ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி *
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம் *
மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
|
|
|
** கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ *
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித் துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா *
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை * அளியனென் றருளியுன் னடியார்க் காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே,
|
|
|
** அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் * விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் * திருக்
கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே
|
|
|
உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற *
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை *
கவர்ந்த வெங்கணைக்காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான் * அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே
|
|
|
** மந்தி பாய்வட வேங்கட மாமலை * வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான் *
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில் *
உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே
|
|
|
சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து
உதிர வோட்டி * ஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன் *
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் * திருவயிற்
றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே
|
|
|
பாரமாய பழவினை பற்றறுத்து * என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான் *
கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான் * திரு
வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே
|
|
|
துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேயவப்பன் *
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை * முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி யேனை யுய்யக்கொண்டதே
|
|
|
கையினார் சுரிசங்கன லாழியர் * நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார் * அணியரங்கனா ரரவின ணைமிசை மேயமாயனார் *
செய்யவா யையோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
|
|
|
பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட * அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து *
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி * நீண்டவப்
பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே
|
|
|
** ஆலமாமரத்தி னிலைமே லொருபாலகனாய் *
ஞாலமேழு முண்டா னரங்கத் தரவி னணையான் *
கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் *
நீலமேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே
|
|
|
** கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன் * என் னுள்ளம் கவர்ந்தானை *
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள் * மற் றொன்றினைக் காணாவே
|
|
|
** பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை *
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம் *
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி * நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
** எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள் *
தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள் *
வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும் *
இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ
|
|
|
** உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கிட மென்பரால் *
சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி *
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே
|
|
|
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி *
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால் *
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை *
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே
|
|
|
பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட * ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால் *
வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி *
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே
|
|
|
விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட *
வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால் *
துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி * முன்
திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே
|
|
|
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக *
அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால் *
உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும் * நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே
|
|
|
கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென *
முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால் *
குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி * முன்
அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே
|
|
|
கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால் *
துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால் *
மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும் * மாமறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே
|
|
|
ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய் *
தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால் *
வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும் * நல்
தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே
|
|
|
சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய * இம்
மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால் *
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி *
ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே
|
|
|
** அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை*
கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல் *
நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண்டும் * உடன்
வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே
|
|
|
** வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால் *
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள் * வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் * என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே
|
|
|
கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான் *
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் * மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன் * என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே
|
|
|
மானாய மென்னோக்கி வாநெடுங் கண்ணீர்மல்கும் வளையும் சோரும் *
தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின் *
கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன் * என் மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே
|
|
|
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை
யே * ஆரச் சாந்தணியாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய் *
மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கி லேனே
|
|
|
பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள் *
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *
நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி *
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே
|
|
|
தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின் *
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் * பூமேல்
மாதாளன் குடமாடி ம துசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் * என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லுகேனே
|
|
|
வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள் * எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான் *
தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன் *
என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே
|
|
|
உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால் *
மறவாதே யெப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின் றளால் *
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் * என்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே
|
|
|
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள் *
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும் *
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி *
அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே
|
|
|
** சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த *
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை * நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார் *
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே
|
|
|
** கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை *
மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை *
எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த
வம்மானை * யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே
|
|
|
** பேரானைக் குறுங்குடியெம் பெருமானை * திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை * முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும் *
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே
|
|
|
ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும் *
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும் *
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை * மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே
|
|
|
வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம் *
தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை * பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை * யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே
|
|
|
நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை * அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே *
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின் *
ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே
|
|
|
தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை * தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை *
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த *
அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே
|
|
|
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை * பிரியாது
வந்தெனது மனத்திருந்த வடமலையை * வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை * யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே
|
|
|
துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும் *
அவர்கட்கங் கருளில்லா அருளானை * தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும் *
அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே
|
|
|
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து *
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை *
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின் *
அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே
|
|
|
** ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை *
காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர் *
நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும் *
நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே
|
|
|
** பண்டைநால் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் *
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும் *
கொண்டல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும் *
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற *
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும் * பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம் *
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும் *
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய *
பின்னும்வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட * ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி *
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர *
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப *
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம் *
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து பொழிதரு மருவியொத் திழிய *
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது *
அங்ஙனே யொக்க அரியுரு வானான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள் *
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய *
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே *
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன் *
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி *
வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட * மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் * உலகில்
சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து *
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட * பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெருநிலம் விழுங்கி * அதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய் * அடியேற் கணியனாய் வந்தென் சிந்தையுள் வெந்துய ரறுக்கும் *
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான் அரங்கமா நகரமர்ந் தானே
|
|
|
** பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து *
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமா நகரமர்ந் தானை *
மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேற் கலியன்வா யொலிகள் *
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே
|
|
|
** ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து *
மாழை மான்மட நோக்கியுன் தோழி உம்பி யெம்பி யென் றொழிந்திலை * உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட *
ஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை * உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று *
கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் * எனக்கும்
ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் *
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப *
கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து * உன்
அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,
|
|
|
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா *
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து *
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுள * அதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன் * ,
தோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமை யிலத்தவிங் கொழிந்து *
போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய் என்ற பொன்னருள் * எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்
தன்னை யஞ்சி * நின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா *
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள் * எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன் *
காத லென்மகன் புகலிடங் காணேன் கண்டு நீதரு வாயெனக் கென்று *
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய் *
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி *
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும் என்றழைப்ப *
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய் *
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
** துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு *
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப *
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து * உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
|
|
|
** மாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் *
ஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை *
நீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த *
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே
|
|
|
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் * ஆயிரம்பே ருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர் *
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த *
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
|
|
|
உரங்க ளாலியன் றமன்னர் மாளப் பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று *
இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும் எம்பி ரானைவம் பார்புனல் காவிரி *
அரங்க மாளியென் னாளிவிண் ணாளி ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று *
சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே
|
|
|
தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும் *
இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள் *
துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர் *
அரங்கமே என்ப திவள்தனக் காசையே
|
|
|
புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்
முனைவனை * மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை *
சினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான் *
கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே
|
|
|
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் * கைவளைகள்
என்னோ கழன்ற இவையென்ன மாயங்கள் *
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க * அவன்மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே
|
|
|
** அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா *
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு *
மணியே மணிமா ணிக்கமே மதுசூதா *
பணியா யெனக்குய் யும்வகை பரஞ்சோதி
|
|
|
இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற *
மெய்ம்மையை விரிந் த சோலை வியந்திரு வரங்கம் மேய *
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை *
தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே
|
|
|
ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால் *
தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம் *
பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று *
காவிபோல் வண் ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே
|
|
|
இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க * என்றன்
அரும்பி ணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு *
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே
|
|
|
** பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும் *
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே
|
|
|
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள் *
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை * மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே
|
|
|
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள் *
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும் *
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும் *
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே
|
|
|
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே
|
|
|
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் *
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன் *
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே
|
|
|
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டு
அற்றாள் * தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும் *
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி *
பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே
|
|
|
நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும் *
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய * இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும் *
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில் என்றேற்குஇதுவன்றோ எழிலாலி என்றார் தாமே
|
|
|
உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே *
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக் *
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது *
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே
|
|
|
இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட *
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ *
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து * என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே
|
|
|
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் *
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி *
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு *
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே
|
|
|
பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர்
** ஆராமம் சூழ்ந்த வரங்கம்
|
|
|
** மன்னும் அரங்கத்தெம் மாமணியை * வல்லவாழ்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
|
|
|
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான் *
இன்று மறப்பனோ ஏழைகாள் * அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் *
திருவரங்க மேயான் திசை
|
|
|
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் * எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான் * முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்
|
|
|
பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *
மணிதிகழும் வண்தடக்கை மால்
|
|
|
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *
தமருள்ளும் தண்பொருப்பு வேலை * தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே *
ஏவல்ல எந்தைக் கிடம்
|
|
|
திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை *
திறம்பா வருசென்றார்க் கல்லால் * திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன் * வானோர்
கடிநகர வாசற் கதவு
|
|
|
** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *
இளங்குமரன் றன்விண் ணகர்
|
|
|
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *
மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு
|
|
|
தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம் * நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும் * வள்வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா அருளாய்
எண்ணந் துழாவு மிடத்து * உள வோபண்டும் இன்னன்னவே
|
|
|
** கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும் *
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும் *
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும் *
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்செய்கின் றாயே
|
|
|
எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா என்னும்கண் ணீர்மல்க இருக்கும் *
எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய் என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும் *
முன்செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா தகுவதோ என்னும் *
முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே
|
|
|
வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும்மை யாக்கும் *
உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே என்னுமுள் ளுருகும் *
கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும் *
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய் இவள்திறத் தென்செய்திட் டாயே
|
|
|
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும் *
கட்டமே காதல் என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா கடியைகாண் என்னும் *
வட்டவாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும் *
சிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே
|
|
|
சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் * ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும் *
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே அலைகடல் கடைந்தவா ரமுதே *
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே
|
|
|
மையல்செய் தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் *
செய்யவாய் மணியே என்னும் தண் புனல்சூழ் திருவரங் கத்துள்ளாய்! என்னும் *
வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்விண் ணோர்முதல் என்னும் *
பைகொள்பாம் பணையாய் இவள்திறத் தருளாய் பாவியேன் செய்யற்பா லதுவே
|
|
|
பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்றநின் றானே *
காலசக் கரத்தாய் கடலிடங் கொண்ட கடல்வண்ணா கண்ணணே என்னும் *
சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் *
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே
|
|
|
கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன் என்னும் *
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே என்னும் *
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் *
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய் என்செய்கேன் என்திரு மகட்கே
|
|
|
** என்திரு மகள்சேர் மார்வனே! என்னும் என்னுடை யாவியே என்னும் *
நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வ னே என்னும் *
அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்ப னே என்னும் *
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே தெளிகிலேன் முடிவிவள் தனக்கே
|
|
|
முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே என்னும் *
கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் *
வடிவுடை வானோர் தலைவ னே!என்னும் வண்திரு வரங்கனே என்னும் *
அடியடை யாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே
|
|
|
** முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல் *
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன் *
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார் *
முகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே
|
|
|