006-ThirupperNagar


ThirupperNagar ( Sri Appakkudathaan Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
2

திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
12

திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
2

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
3

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

நம்மாழ்வார் திருவாய்மொழி
11

Total
33

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.6.2

கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும் *

எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் *

சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க * நல்

அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா

  

 

  

 

  


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.9.4

கொண்டல்வண் ணாஇங்கே போத ராயே கோயிற்பிள் ளாய்இங்கே போத ராயே *

தெண்திரை சூழ்திருப் பேர்க்கி டந்த திருநார ணாஇங்கே போத ராயே *

உண்டுவந் தேன்அம்ம னென்று சொல்லி ஓடி அகம்புக ஆய்ச்சி தானும் *

கண்டெதி ரேசென் றெடுத்துக் கொள்ளக் கண்ணபி ரான்கற்ற கல்வி தானே

  

 

  

 

  


3   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 36

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *

நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்

தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *

அணைப்பார் கருத் தனா வான்

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.1

** கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன் *

பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும் *

செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர் *

பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.2

வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும் *

அங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை *

திங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர் *

எங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.3

ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால் *

ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான் *

பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல் *

கருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.4

ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன் *

ஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான் *

தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர் *

வானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.5

வக்கரன் வாய்முன் கீண்ட மாயனே என்று வானோர்

புக்கு * அரண் தந்த ருளாய் என்னப்பொன் னாகத் தானை *

நக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த *

சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.6

விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு * வில்லால்

இலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான் *

நலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு *

மலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.7

வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி *

கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான் *

திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் * வேலை

வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே

  

 

  

 

  


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.8

அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள் *

கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான் *

செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும் *

எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.9

நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார் *

மேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம் *

சேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார் *

சீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே

  

 

  

 

  


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.10

** வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் * பள்ளி

கொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை *

திண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை *

கொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே

  

 

  

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.4

துளக்க மில்சுட ரை * அவு ணனுடல்

பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய் *

அளப்பி லாரமு தையம ரர்க்கருள்

விளக்கினை * சென்று வெள்ளறைக் காண்டுமே

  

 

  

 

  


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.10

** பெற்றம் ஆளியை பேரில் மணாளனை *

கற்ற நூல்கலி கன்றி யுரைசெய்த *

சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு *

அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே

  

 

  

 

  


16   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 17

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி *

ஏசினார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம் *

பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு *

ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே

  

 

  

 

  


17   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 19

** பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்

உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே

  

 

  

 

  


18   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 8

** நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் * ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் * உலக மேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் * பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே

  

 

  

 

  


19   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 9

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய் பேராய் *

கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்

பங்கத்தாய் * பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா *

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே

  

 

  

 

  


20   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 19

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் * தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும் *

பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி *

பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே

  

 

  

 

  


21   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 70

** மதிட் கச்சி ஊரகமே பேரகமே *

பேரா மருதிருத்தான் வெள்ள றையே வெஃகாவே

  

 

  
 

 

  


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 118

** மன்னும் அரங்கத்தெம் மாமணியை *

வல்லவாழ் பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை

  

 

  
 

 

  


23   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.1

** திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன *

திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் *

குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால் *

திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே

  

 

  

 

  


24   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.2

பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து *

பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான் *

காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும் *

ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே

  

 

  

 

  


25   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.3

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன் *

மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை *

கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான் *

அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே

  

 

  

 

  


26   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.4

எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப *

களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன் *

கிளிதா வியசோலைகள் சூழ்திருப் பேரான் *

தெளிதா கியசேண் விசும்புதரு வானே

  

 

  

 

  


27   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.5

வானே தருவா னெனக்காயென் னோடொட்டி *

ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து * இன்று

தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் *

தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே

  

 

  

 

  


28   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.6

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் *

பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து *

இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான் *

விருப்பே பெற்றமு த முண்டு களித்தேனே

  

 

  

 

  


29   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.7

உண்டு களித்தேற்கு  உம்பரென் குறை * மேலைத்

தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன் *

வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான் *

கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே

  

 

  

 

  


30   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.8

கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன் *

எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே *

வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான் *

திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ

  

 

  

 

  


31   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.9

இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான் *

அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான் *

குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான் *

ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே

  

 

  

 

  


32   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.10

** உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்

பெற்றேன் * ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய் *

கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு *

அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே

  

 

  

 

  


33   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.11

** நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல் *

நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன் *

சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்

வல்லார் * தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே