011-Thirukkudanthai


Thirukkudanthai ( Sri Sarangapani Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
3

ஆண்டாள் நாச்சியார் திருமொழி
1

திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்
6

திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
17

திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
2

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
3

திருமங்கையாழ்வார் திருவெழு கூற்றிருக்கை
1

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
2

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
2

நம்மாழ்வார் திருவாய்மொழி
11

Total
51

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.6.2

கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும் *

எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் *

சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க * நல்

அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா

  

 

  

 

  


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.6.6

ஆலத் திலையான் அரவி னணைமேலான் *

நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் *

பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த *

கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா

  

 

  

 

  


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.7.7

குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே *

மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா *

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய் *

குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்

  

 

  

 

  


4   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 13.2

பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை *

வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே *

கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி * நீலார்

தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே

  

 

  

 

  


5   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 56

இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக *

கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே *

விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார் *

வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே

  

 

  

 

  


6   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 57

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன் *

அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான் *

கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர் *

பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே

  

 

  

 

  


7   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 58

மரங்கெட நடந்தடர்த்து மத்தயானை மத்தகத்து *

உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ சித்துகந்த வுத்தமா *

துரங்கம்வாய்பி ளந்துமண்ண ளந்தபாத * வேதியர்

வரங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே

  

 

  

 

  


8   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 59

சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில் *

கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா *

காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை *

காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே

  

 

  

 

  


9   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 60

** செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய் *

விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று *

எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ் *

செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே

  

 

  

 

  


10   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 61

** நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய் *

இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம் *

கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள் *

கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே

  

 

  

 

  


11   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 36

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *

நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்

தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *

அணைப்பார் கருத் தனா வான்

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.1.2

** ஆவியே அமுதே எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா *

பாவியேனுணரா தெத்தனைபகலும்  பழுதுபோயொழிந்தனநாள்கள் *

தூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது * என்

நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்

  

 

  

 

  


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.1.7

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர் இன்னதோர்த்தன்மையென்றுணரீர் *

கற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும் *

சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின் *

நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம்

  

 

  

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.4

ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய *

தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான் *

பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற

தாரான் * தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே

  

 

  

 

  


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.1

** அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி * அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது * இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர் *

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே

  

 

  

 

  


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.5

வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப *

நாணாளும் நின்னினைந்து நைவேற்கு * ஓமண்ணளந்த

தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த

தோளாளா * என்றனக்கோர் துணையாள னாகாயே

  

 

  

 

  


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.6.8

** குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி *

துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ *

முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு * இதுநடுவே

வயலாலி மணவாளா கொள்வாயோ மணிநிறமே

  

 

  

 

  


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.7

வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள் * எண்ணில்

பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான் *

தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன் *

என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே

  

 

  

 

  


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.9

** பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும் *

சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை *

கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை *

நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.1

** கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை

இடந்த நம்பி * எங்கள் நம்பி எறிஞர் அரணழிய *

கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால் *

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே

  

 

  

 

  


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.3

வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் மற்றோர் நெஞ்சறி யான் * அடி யேனுடைச்

சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன் *

கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் கோவி னைக்குட மாடிய கூத்தனை *

எந்தை யையெந்தை தந்தைதம் மானை எம்பி ரானையெத் தால்மறக் கேனே

  

 

  

 

  


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.6.9

** பேரா னைக்குடந்தைப் பெருமானை * இலங்கொளிசேர்

வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை *

ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற *

காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே

  

 

  

 

  


23   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.5

வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை *

எந்தாய் போயறியாய் இதுவே யமையாதோ *

கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த

மைந்தா * உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே

  

 

  

 

  


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.2

தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த *

சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி *

பாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி *

ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா

  

 

  

 

  


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.6

வானை ஆரமு தம்தந்த வள்ளலை *

தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய் *

ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்

கோனை * யாம்குடந் தைச்சென்று காண்டுமே

  

 

  

 

  


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.10.8

இங்கே போதுங்கொலோ *

இனவேல்நெடுங் கண்களிப்ப *

கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால் *

இங்கே போதுங்கொலோ

  

 

  

 

  


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.3.4

அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு *

வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி *

சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு * உறியார்

நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே

  

 

  

 

  


28   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.6.9

அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் திரைததும்ப ஆவவென்று *

தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தானருளி * உலகமேழும்

உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட *

கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை நகர்ப்பாடி யாடீர்களே

  

 

  

 

  


29   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 6

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட *

கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை * இன்பப்

பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்

பூவினை * புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே

  

 

  

 

  


30   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 14

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி * நாளும்

பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன் *

தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை *

பாவியேன் பாவி யாது பாவியே னாயி னேனே

  

 

  

 

  


31   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 17

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று *

செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து * ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு *

நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே

  

 

  

 

  


32   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 19

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் * தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும் *

பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி *

பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே

  

 

  

 

  


33   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 29

** அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை *

குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து

வென்றானை * குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்

நின்றானை * தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே

  

 

  

 

  


34   திருமங்கையாழ்வார் – திருவெழு கூற்றிருக்கை – 2672

** ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில் * ஒருமுறை அயனை யீன்றனை *

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா * மும்மதிள் இலங்கை யிருகால் வளைய * ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை *

மூவடி நானிலம் வேண்டி * முப்புரி நூலொடு மானுரி யிலங்கும் மார்வினின் * இருபிறப் பொருமா ணாகி * ஒருமுறை யீரடி மூவுல களந்தானை *

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி * நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை * ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை *

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி * அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை *

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து * நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி * ஒன்றினில் ஒன்றி நின்று * ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை *

முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு * ஆறுபொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை *

ஏழுல கெயிற்றினில் கொண்டனை * கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை * சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை * சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண * நின் ஈரடி ஒன்றிய மனத்தால் * ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன * அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை *

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை * மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே * அறுபதம் முரலும் கூந்தல் காரணம் * ஏழ்விடை யடங்கச் செற்றனை * அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை * ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை * அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் * இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை *

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை * வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும் * செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த * கற்போர் புரிசைக் கனக மாளிகை * நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும் *

** செல்வம் மல்குதென் திருக்குடந்தை * அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க * ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம * நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே

  

 

  
 

 

  


35   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 73

காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை *

ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை

  

 

  
 

 

  


36   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 114

பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை *

தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை

  

 

  
 

 

  


37   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 70

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளும் தண்பொருப்பு வேலை * தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே *

ஏவல்ல எந்தைக் கிடம்

  

 

  

 

  


38   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 97

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ *

செங்க ணெடுமால் திருமார்பா * பொங்கு

படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய் *

குடமூக்கில் கோயிலாக் கொண்டு

  

 

  

 

  


39   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 30

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் *

நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு * வாய்ந்த

மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி *

இறைபாடி யாய இவை

  

 

  

 

  


40   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 62

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு

  

 

  

 

  


41   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.1

** ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே *

நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே *

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை *

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

  

 

  

 

  


42   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.2

எம்மா னே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே *

எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே *

செம்மா கமலம்  செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை *

அம்மா மலர்க்கண் வளர்கின் றானே என்நான் செய்கேனே

  

 

  

 

  


43   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.3

என்நான் செய்கேன் யாரே களைகண் என்னையென் செய்கின்றாய் *

உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன் *

கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாழ்ணாள் *

சென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே

  

 

  

 

  


44   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.4

செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் *

உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி *

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான்நான்

அலப்பாய் * ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே

  

 

  

 

  


45   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.5

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன் *

தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் *

செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தா மரைக்கண்ணா *

தொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்

  

 

  

 

  


46   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.6

சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும்

ஊழ்கண் டிருந்தே * தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன் *

வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே *

யாழி னிசையே அமுதே அறிவின் பயனே அரியேறே

  

 

  

 

  


47   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.7

அரியே றே என் அம்பொற் சுடரே செங்கட் கருமுகிலே *

எரியேபவளக் குன்றே நாற்றோள் எந்தாய் உனதருளே *

பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே *

தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே

  

 

  

 

  


48   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.8

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன் *

வளைவாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மாமாயா *

தளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது *

இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே

  

 

  

 

  


49   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.9

இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே *

அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதி பெருமூர்த்தி *

திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை *

அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே

  

 

  

 

  


50   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.10

வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய் *

ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் *

தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை

ஊராய் * உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ

  

 

  

 

  


51   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.8.11

** உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான் *

கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் *

குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் *

மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே