Thiru Chithrakoodam (Chidambaram – Sri Govindaraja Perumal Temple )
Azhwar | Paasuram | Count | Video | Audio |
---|---|---|---|---|
குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | |||
** அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி *
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை *
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே
|
|
|
வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி *
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின் *
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே
|
|
|
செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி *
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றிகொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை *
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே
|
|
|
தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை *
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து *
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே
|
|
|
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி *
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி *
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே
|
|
|
தனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி *
வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான் *
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே
|
|
|
குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி *
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து *
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே
|
|
|
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன் * பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் *
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே
|
|
|
செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த *
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட *
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை * மறவாத வுள்ளந் தன்னை உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே
|
|
|
** அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்று * இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி *
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே
|
|
|
** தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை *
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா *
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த *
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே
|
|
|
** ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து *
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர் *
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய் *
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் * ஐந்து
தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தை யுள்வைத்து மென்பீர் *
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த *
தீயோங்க வோங்க ப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய் விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த *
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான் அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர் *
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த *
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
அருமா நிலமன் றளப்பான் குறளாய் அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த *
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம் பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர் *
கருமா கடலுள் கிடந்தா னுவந்து கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல் *
திருமால் திருமங் கையொடாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
கோமங்க வங்கக் கடல்வைய முய்யக் குலமன்ன ரங்கம் மழுவில் துணிய *
தாமங் கமருள் படைதொட்ட வென்றித் தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர் *
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ்மங்கை யெங்கும் திகழப் * புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
நெய்வா யழலம் புதுரந்து முந்நீர் துணியப் பணிகொண் டணியார்ந்து * இலங்கு
மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம் மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர் *
அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான் அருமா மறையந் தணர்சிந் தைபுக *
செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த *
தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர் *
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள் *
தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
மாவாயி னங்கம் மதியாது கீறி மழைமா முதுகுன் றெடுத்து * ஆயர் தங்கள்
கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன் குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர் *
மூவா யிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி *
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
செருநீல வேற்கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் *
அருநீல பாவ மகலப் புகழ்சேர் அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர் *
பெருநீர் நிவாவுந்தி முத்தங் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள *
திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
|
|
|
** சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத் திருசித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு *
ஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப அலைநீ ருலகுக் கருளே புரியும் *
காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார் *
பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப் பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே
|
|
|
** வாட மருதிடை போகி மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு *
ஆடல்நல் மாவுடைத் தாயர் ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான் *
கூடிய மாமழை காத்த கூத்த னெனெவரு கின்றான் *
சேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட பிள்ளை பரிசிது வென்றால் *
மாநில மாமகள் மாதர் கேள்வ னிவனென்றும் * வண்டுண்
பூமகள் நாயக னென்றும் புலங்கெழு கோவியர் பாடி *
தேமலர் தூவ வருவான் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
பண்டிவன் வெண்ணெயுண் டானென் றாய்ச்சியர் கூடி யிழிப்ப *
எண்டிசை யோரும்வ ணங்க இணைமரு தூடு நடந்திட்டு *
அண்டரும் வானத் தவரு மாயிர நாமங்க ளோடு *
திண்டிறல் பாட வருவான் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
வளைக்கை நெடுங்கண் மடவா ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப *
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண்தடம் புக்கண்டர் காண *
முளைத்த எயிற்றழல் நாகத் துச்சியில் நின்றது வாட *
திலைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
பருவக் கருமுகி லொத்து முட்டுடை மாகட லொத்து *
அருவித் திரள்திகழ் கின்ற வாயிரம் பொன்மலை யொத்து *
உருவக் கருங்குழ லாய்ச்சி திறத்தின மால்விடை செற்று *
தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
** எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான் *
உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி *
வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே *
தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
ஆவ ரிவைசெய் தறிவார்? அஞ்சன மாமலை போலே *
மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து * அழ காய
காவி மலர்நெடுங் கண்ணார் கைதொழ வீதி வருவான் *
தேவர் வணங்குதண் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
பொங்கி யமரி லொருகால் பொன்பெய ரோனை வெருவ *
அங்க வனாக மளைந்திட் டாயிரந் தோளெழுந் தாட *
பைங்க ணிரண்டெரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய் *
சிங்க வுருவில் வருவான் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
கருமுகில் போல்வதோர் மேனி கையன வாழியும் சங்கும் *
பெருவிறல் வானவர் சூழ ஏழுல கும்தொழு தேத்த *
ஒருமக ளாயர் மடந்தை யொருத்தி நிலமகள் * மற்றைத்
திருமக ளோடும் வருவான் சித்திர கூடத்துள் ளானே
|
|
|
** தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த *
வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன்மரு வார் *
ஊனமர் வேல்கலி கன்றி யொண்டமி ழொன்பதோ டொன்றும் *
தானிவை கற்றுவல் லார்மேல் சாரா தீவினை தானே
|
|
|
** தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை *
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை
|
|
|