Thirukkazhiseerama Vinnagaram ( Seerkazhi – Thirivikaraman Perumal Temple )
Azhwar | Paasuram | Count | Video | Audio |
---|---|---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
** ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி * ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர் * தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும் அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும் *
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி * நக்கன்
ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை ஒளிமலர்ச்கே வடியணைவீர் * உழுசே யோடச்
சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத் தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க *
எங்கும் தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
வையணைந்த நுதிக்கோட்டு வராக மொன்றாய் மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து *
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோள் நேர்ந்தவந்தா ளணைகிற்பீர் * நெய்த லோடு
மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும் மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள் *
செய்யணைந்து களைகளையா தேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள் பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண் *
நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட நின்மலந்தா ளணைகிற்பீர் * நீல மாலைத்
தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால் *
செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து *
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட விண்ணவர்க்கோன் தாளணைவீர் * விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல் *
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப் படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை *
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த விண்ணவர்க்கோன் தாளணைவீர் * வெற்புப்போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால் *
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த *
செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன் திருவடிசேர்ந் துய்கிற்பீர் * திரைநீர்த்
தெள்கி மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி *
தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய் பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல் *
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில் மரங்கொணர்ந்தா னடியணைவீர் * அணில்கள்தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு * பீனத்
தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து *
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில் கலந்தவந்தா ளணைகிற்பீர் * கழுநீர் கூடித்
துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி *
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே
|
|
|
** செங்கமலத் தயனனைய மறையோர் காழிச் சீராம விண்ணகரென் செங்கண் மாலை *
அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன் அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம் *
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன் கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன *
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே
|
|
|