Thiru Kavalampaadi ( Sri Gopala Krishna Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 10 |
Total | 10 |
** தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு *
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய் *
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக் *
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே
மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான் *
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய் *
துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய *
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி *
கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய் *
பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக் *
கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து * ஆங்
கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே *
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக் *
கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து *
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே *
தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய *
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று *
பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய் *
நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய *
கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி *
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய் *
பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும் நாங்கைக் *
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று *
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் *
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக் *
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே
சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி *
அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய் *
மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை *
கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே
** மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக் *
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன *
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி *
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே