039-ThiruVellakkulam


Thiru Vellakkulam ( Annan Kovil – Sri Srinivasa Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.1

** கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் *

நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர் *

திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்

அண்ணா * அடியே னிடரைக் களையாயே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.2

கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே *

நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர் *

செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்

எந்தாய் * அடியே னிடரைக் களையாயே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.3

குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே *

நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர் *

சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்

நின்றாய் * நெடியாய் அடியே னிடர்நீக்கே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.4

கானார் கரிகொம் பதொசித்த களிறே *

நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர் *

தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆனாய் * அடியேனுக் கருள்புரி யாயே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.5

** வேடார் திருவேங் கடம்மேய விளக்கே *

நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர் *

சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய் *

பாடா வருவேன் விணையா யினபாற்றே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.6

கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய் *

நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச் *

செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே *

எல்லா இடரும் கெடுமா றருளாயே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.7

கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே *

நாலா கியவே தியர்மன் னியநாங்கூர் *

சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்

மாலே * எனவல் வினைதீர்த் தருளாயே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.8

வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய் *

நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர் *

சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆரா வமுதே * அடியேற் கருளாயே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.9

பூவார் திருமா மகள்புல் லியமார்பா *

நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த் *

தேவா திருவெள்ளக் குளத்துறை வானே *

ஆவா அடியா னிவன் என் றருளாயே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.7.10

** நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச் *

செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை *

கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை *

வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே