Thiru Vellakkulam ( Annan Kovil – Sri Srinivasa Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 10 |
Total | 10 |
** கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் *
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர் *
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா * அடியே னிடரைக் களையாயே
கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே *
நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர் *
செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்
எந்தாய் * அடியே னிடரைக் களையாயே
குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே *
நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர் *
சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்
நின்றாய் * நெடியாய் அடியே னிடர்நீக்கே
கானார் கரிகொம் பதொசித்த களிறே *
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர் *
தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆனாய் * அடியேனுக் கருள்புரி யாயே
** வேடார் திருவேங் கடம்மேய விளக்கே *
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர் *
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய் *
பாடா வருவேன் விணையா யினபாற்றே
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய் *
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச் *
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே *
எல்லா இடரும் கெடுமா றருளாயே
கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே *
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர் *
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே * எனவல் வினைதீர்த் தருளாயே
வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய் *
நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர் *
சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆரா வமுதே * அடியேற் கருளாயே
பூவார் திருமா மகள்புல் லியமார்பா *
நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த் *
தேவா திருவெள்ளக் குளத்துறை வானே *
ஆவா அடியா னிவன் என் றருளாயே
** நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச் *
செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை *
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை *
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே