044-ThiruNeermalai


Thiru Neermalai ( Sri Neervanna Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 16
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 1
Total 20

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.1

** அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி * அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது * இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர் *

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.2

காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க * முனே

மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்

தாண்டான் * அ வுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து * அரியாய்

நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.3

அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில் *

புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில் *

பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு * அணிசேர்

நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.4

தாங்காததோ ராளரி யாயவுணன் தனைவீட முனிந்தவ னாலமரும் *

பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில் *

பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட *

நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.5

மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவ * மதிசேர்

கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர *

காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும் *

நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.6

பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும் * எனக்

காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய * அப்

பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான் *

நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.7

புகராருரு வாகிமுனிந்தவனைப் புகழ்வீட முனிந்துயி ருண்டு * அசுரன்

நகராயின பாழ்பட நாமமெறிந்ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன் *

பகராதவ னாயிர நாமமடிப் பணியாதவ னைப்பணி யாமலரில் *

நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.8

பிச்சச்சிறு பீலிபி டித்துலகில் பிணந்தின்மடவாரவர் போல் * அங்ஙனே

அச்சமிலர் நாணில ராதன்மையால் அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய் *

நச்சிநம னாரடை யாமைநமக் கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு *

நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.9

பேசுமள வன்றிது வம்மின்நமர் பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள் *

நாசமது செய்திடும் ஆதன்மையால் அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல் *

வாசமணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்துழல் வார் * மதியில்

நீசரவர் சென்றடை யாதவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.10

நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன் * அமரில்

கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு *

உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர் *

கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.8

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும் *

புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் *

குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி *

இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.4

ஓடா அரியாய் இரணியனை யூனிடந்த *

சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை *

வாடா மலர்த்துழாய் மாலை முடியானை *

நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.7

கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு *

நிதியே திருநீர் மலைநித் திலத்தொத்தே *

பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்

கதியே * உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.3

** அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய் *

வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள் *

பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்

உருகினாள் * உள்மெலிந் தாள்இது வென்கொலோ


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.8

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலைம ணாளர் வந்து * என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலை யார்கொல் நினைக்கமாட்டேன் *

மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த மாமுகில் போன்றுளர் வந்துகாணீர் *

அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் அச்சோவொரு வரழகியவா


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.1

** ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள் *

வருநல் தொல்கதி யாகிய மைந்தனை *

நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய் *

கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே


17   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 18

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் *

பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன் *

ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே


18   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 73

காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை *

ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 130

நென்னலை யின்றினை நாளையை * நீர்மலைமேல்  

மன்னும் மறைநான்கும் ஆனானை  


20   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 46

பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *

மணிதிகழும் வண்தடக்கை மால்