ThirukKadigai ( Sholingur – Sri Yoga Narasimha Swamy Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 2 |
திருமங்கையாழ்வார் | சிறிய திருமடல் | 1 |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 1 |
Total | 4 |
1 திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.4
** மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை * என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை *
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த *
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே
2 திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.9
** கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் *
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் *
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை *
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ
3 திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 73
காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை *
ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை
4 பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 61
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *
இளங்குமரன் றன்விண் ணகர்