Thiru Kacchi ( Kanchipuram – Sri Varadharajar Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 1 |
திருமங்கையாழ்வார் | திருக்குறுந்தாண்டகம் | 1 |
திருமங்கையாழ்வார் | திருநெடுந்தாண்டகம் | 2 |
பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி | 2 |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 1 |
Total | 7 |
கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் *
எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான் * இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு
நல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்
உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே
வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய் பேராய் *
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் * பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா *
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும் *
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும் *
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு *
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே
என்னெஞ்ச மேயான்என் சென்னியான் * தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன் * முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான் * உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்
** அத்தியூ ரான்புள்ளை யூர்வான் * அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான் * மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும் *
இறையாவான் எங்கள் பிரான்
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும் *
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் * உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *
தாம்கடவார் தண்டுழா யார்