Thiruvekka ( Sri Yathokthakari Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமழிசை ஆழ்வார் | திருச்சந்த விருத்தம் | 2 |
திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | 1 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 1 |
திருமங்கையாழ்வார் | திருநெடுந்தாண்டகம் | 3 |
திருமங்கையாழ்வார் | சிறிய திருமடல் | 1 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | 1 |
பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி | 1 |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 4 |
நம்மாழ்வார் | திருவிருத்தம் | 1 |
Total | 15 |
நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள் *
சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே *
குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும் *
நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே
நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து *
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம் *
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன் *
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *
நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *
அணைப்பார் கருத் தனா வான்
கூந்த லார்மகிழ் கோவல னாய் * வெண்ணெய்
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய் *
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய *
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே
** நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய் * நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் * உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் * பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்றும் *
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே என்றும் *
அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும் *
சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே
** மதிட் கச்சி ஊரகமே பேரகமே *
பேரா மருதிருத்தான் வெள்ள றையே வெஃகாவே
மன்னிய பாடகத்தெம் மைந்தனை * வெஃகாவில்
உன்னிய யோகத் துறக்கத்தை
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் * நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே *
என்றால் கெடுமாம் இடர்
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும் *
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் * உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *
தாம்கடவார் தண்டுழா யார்
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *
மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் *
பசைந்தங் கமுது படுப்ப * அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில் *
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் * ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா * விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால் *
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட *
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை * கடந்தபொன்னே
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலது * எப் பாலைக்கும் சேமத்ததே