Thiru Ashtabujam ( Sri Aadhikesava Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 10 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | 1 |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 1 |
Total | 12 |
** திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப *
முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க *
எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா *
அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும் *
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன் *
வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த *
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள் *
உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே *
வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து * இருண்ட
அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை
யஞ்ச * அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன் *
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து *
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும் * மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து * நீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற *
அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம் ஏந்திழையார் *
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து * தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம் *
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் * மேனியஞ்சாந்
திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன் ஓவிநல்லார் *
எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும் *
அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி * அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில் *
காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் * என்
ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு *
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு *
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன் *
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே
** மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன் *
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை *
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி * குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே
வெஃகாவில் உன்னிய யோகத் துறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை
** தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் *
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று * குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் *
தாள்முதலே நங்கட்குச் சார்வு