051-ThiruOoragam


Thiru Ooragam ( Ooragathaan – Sri Ulagalantha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 2
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 2
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 6

1   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 63

நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள் *

சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே *

குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும் *

நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே


2   திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் – 64

நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து *

அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம் *

அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன் *

நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே


3   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 8

** நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் * ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் * உலக மேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் * பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே


4   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 13

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்றும் *

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே என்றும் *

அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும் *

சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே


5   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 70

** மதிட் கச்சி ஊரகமே பேரகமே *

பேரா மருதிருத்தான் வெள்ள றையே வெஃகாவே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 128

உன்னிய யோகத் துறக்கத்தை * ஊரகத்துள்

அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை