060-ThiruVelukkai


Thiru Velukkai ( Sri Azhagiya Singar Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 3
Total 4

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 127

மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை *

மன்னிய பாடகத்தெம் மைந்தனை


2   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 26

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும் *

நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் * உறைந்ததுவும்,

வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *

தாம்கடவார் தண்டுழா யார்


3   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 34

அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல் *

நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் * அன்று

கிடந்தானைக் கேடில்சீ ரானை * முன் கஞ்சைக்

கடந்தானை நெஞ்சமே காண்


4   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 62

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு