Thiruthanka ( Thoopul – Sri Deepa Prakasar Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 1 |
திருமங்கையாழ்வார் | திருநெடுந்தாண்டகம் | 1 |
நம்மாழ்வார் | திருவிருத்தம் | 1 |
Total | 3 |
1 திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.2
** பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்
மின்னை * வேங்கடத் துச்சியிற் கண்டுபோய் *
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
றன்னை * யாம்சென்று காண்டும்தண் காவிலே
2 திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 14
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே
3 நம்மாழ்வார் – திருவிருத்தம் – 26
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட *
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை * கடந்தபொன்னே
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலது * எப் பாலைக்கும் சேமத்ததே