Thiru Nindravoor ( Sri Bhatavatsala Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 2 |
Total | 2 |
1 திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.5.2
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி
மாண்டு * அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை * கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை *
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே
2 திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.5
** ஏற்றி னையிம யத்துளெம் மீசனை இம்மை யைமறு மைக்கு மருந்தினை *
ஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும் ஐய னைக்கையி லாழியொன் றேந்திய
கூற்றி னை * குரு மாமணிக் குன்றினை நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை *
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே