Thirukkurungudi ( Sri Nindra Nambi Perumal Temple )
Azhwar | Paasuram | Count | Video | Audio |
---|---|---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | |||
திருமழிசை ஆழ்வார் | திருச்சந்த விருத்தம் | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
திருமங்கையாழ்வார் | திருநெடுந்தாண்டகம் | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | |||
நம்மாழ்வார் | திருவாய்மொழி | |||
** உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும் *
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி *
மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே *
என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே
|
|
|
** கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம் *
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய் *
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும் *
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பது உன்னையே
|
|
|
ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு * ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா *
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து * என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்
|
|
|
** பேரானைக் குறுங்குடியெம் பெருமானை * திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை * முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும் *
ஆராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே
|
|
|
மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும் *
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன் *
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே * வருபுனல்சூழ் திருவிண் ணகரானே
|
|
|
** தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்
துவள * என் னெஞ்சகம் சோரவீரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன் *
இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன *
குவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்
|
|
|
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே *
ஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் * உறங்கும்
பேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார் *
கோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்
|
|
|
காலையும் மாலையொத் துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும் *
போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி *
மாலவன் மாமணி வண்ணன்மாயம் மற்று முளவவை வந்திடாமுன் * கோல
மயில்பயி லும்புறவில் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்
|
|
|
கருமணி பூண்டுவெண் ணாகணைந்து காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும் *
ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள ஓரிர வுமுறங் காதிருப்பேன் *
பெருமணி வானவ ருச்சிவைத்த பேரரு ளாளன் பெருமைபேசி *
குருமணி நீர்கொழிக் கும்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
|
|
|
திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு *
கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற கோல இளம்பிறை யோடுகூடி *
பண்டைய வல்லவிவை நமக்குப் பாவியே னாவியை வாட்டஞ்செய்யும் *
கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
|
|
|
எல்லியும் நன்பக லுமிருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார் *
நல்லர் அவர்திறம் நாமறியோம் நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை *
வல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நாம்மறவோம் *
கொல்லை வளரிள முல்லைபுல்கு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
|
|
|
செங்க ணெடிய கரியமேனித் தேவ ரொருவரிங் கேபுகுந்து * என்
அங்கம் மெலிய வளைகழல ஆதுகொ லோ என்று சொன்னபின்னை *
ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ டாடு மதனை யறியமாட்டேன் *
கொங்கலர் தண்பணை சூழ்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
|
|
|
கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து * என்
ஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு *
ஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன் *
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
|
|
|
சோத்தென நின்று தொழவிரங்கான் தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும் *
போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் போயின வூரறி யேன் * என்கொங்கை
மூத்திடு கின்றன மற்றவன்றன் மொய்யக லம் அணை யாதுவாளா *
கூத்த னிமையவர் கோன்விரும்பும் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
|
|
|
** செற்றவன் தென்னிலங் கைமலங்கத் தேவர்பி ரான்திரு மாமகளைப்
பெற்றும் * என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரரு ளாளன் பெருமைபேசக்
கற்றவன் * காமரு சீர்க்கலியன் கண்ணகத் தும்மனத் துமகலாக்
கொற்றவன் * முற்றுல காளிநின்ற குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
|
|
|
** அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர் *
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் *
தக்க மரத்தின் தாழ்சினையேறி * தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே
|
|
|
துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள் *
பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும் *
செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும் *
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே
|
|
|
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் *
கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர் *
ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி *
கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே
|
|
|
சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று * அரக்கன்
உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும் *
இரவும் பகலும் ஈன்தேன் முரல * மன்றெல்லாம்
குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே
|
|
|
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்
ஐவர்க் காய் * அன் றமரில் உய்த்தான் ஊர்போலும் *
மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான் *
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே
|
|
|
தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி *
தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள் *
மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் * வானில்
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே
|
|
|
வல்லிச் சிறுநுண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற *
அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள் *
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான் *
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே
|
|
|
நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள் *
ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள் *
தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் * கூர்வாய்
நாரை பேடையொ டாடும் குறுங்குடியே
|
|
|
நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி *
சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள் *
என்றும் மிரவும் பகலும் வஜீவண் டிசைபாட *
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே
|
|
|
** சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம் *
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல் *
கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை *
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே
|
|
|
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே
|
|
|
பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை *
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை
|
|
|
** நம்பியைத் தென் குறுங்குடிநின்ற * அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை *
உம்பர்வானவ ராதியஞ்சோதியை *
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ
|
|
|
உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன்
செல்வத்தை * வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென் *
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே *
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே
|
|
|
** எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர் *
நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும் *
செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே
|
|
|
என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர் என்னை முனியாதே *
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
மின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திருமறுவும் *
மன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே
|
|
|
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர் *
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும் *
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே
|
|
|
நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று அன்னையரும் முனிதிர் *
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன்முடி யும்வடிவும் *
பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே
|
|
|
பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர் *
தக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின் *
தொக்கசோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் *
தக்கதாமரைக் கண்ணும் பாவியே னாவியின் மேலனவே
|
|
|
மேலும் வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள் *
சோலைசூழ் தண்திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
கோலநீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும் *
நீலமேனியும் நான்கு தோளுமென் நெஞ்சம் நிறைந்தனவே
|
|
|
நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள் *
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின் *
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும் *
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே
|
|
|
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர் *
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
செய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும் *
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே
|
|
|
முன்னின் றாயென்று தோழிமார்களும் அன்னைய ரும்முனிதிர் *
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
சென்னி நீண்முடி யாதியாய உலப்பி லணிகலத்தன் *
கன்னல் பாலமு தாகிவந்தென் நெஞ்சம் கழியானே
|
|
|
கழீயமிக்கதோர் காதல ளிவளென் றன்னை காணக்கொடாள் *
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் *
குழுமித் தேவர் குழாங்கள்தொழச் சோதிவெள் ளத்தினுள்ளே *
எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும் ஆர்க்கு மறிவரிதே
|
|
|
** அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி *
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன *
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடிய தன்மேல் *
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே
|
|
|