066-Thiruccherivaramangai


Thiruccherivaramangai ( Vaanamaamalai – Sri Thothatrinatha Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.1

** நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேன் * ஆகிலும் இனி யுன்னைவிட்டு ஒன்றும்

ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே *

சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர் *

வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகையல்லே னங்கே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.2

அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்

உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து * நான்

எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே *

திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை *

சங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.3

கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட! எங் கார்முகில் வண்ணா *

பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் *

தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு *

அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.4

மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு ஆயன்று மாயப்போர் பண்ணி *

நீறு செய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே *

தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் *

ஏறிவீற் றிருந்தாய் உன்னை எங்கெய்தக் கூவுவனே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.5

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று *

கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே *

செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர் *

கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.6

** ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே! கண்ணா! என்று மென்னை யாளுடை *

வானநா யகனே மணிமா ணிக்கச் சுடரே *

தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத் தவர்க்கை தொழவுறை *

வான மாமலை யே அடி யேன்தொழ வந்தருளே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.7

வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே * உலகுக்கோர்

முந்தைத் தாய்தந்தையே முழுஏழுலகு முண்டாய் *

செந்தொ ழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் *

அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.8

அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கறிந்தனன் *

அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய் *

பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை வாணனே * என்றும்

புகற்கரிய எந்தாய் புள்ளின்வாய் பிளந்தானே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.9

புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருதேழ் அடர்த்த * என்

கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே *

தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலிதண் சிரீவர மங்கை

உள் * இருந்த எந்தாய்! அருளாய் உய்யுமா றெனக்கே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.10

ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * உனக் கோர் கைம்

மாறு நானொன் றிலேனென தாவியு முனதே *

சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும் மலிதண் சிரீவர மங்கை *

நாறு பூந்தண் துழாய்முடி யாய் தெய்வ நாயகனே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 5.7.11

** தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை *

கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன் *

செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன் *

வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே