069-Thirupperai


Thirupperai ( Sri Magara NedungKuzhai Kaathar Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.1

** வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித் தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே *

புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள் *

வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த வேத வொலியும் விழா வொலியும் *

பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத் திருப்பே ரையில் சேர்வன் நானே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.2

நானக் கருங்குழல் தோழி மீர்காள்! அன்னை யர்காள்! அயல் சேரியீர்காள் *

நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன் என்வசம் அன்றிதி ராப்ப கல்போய் *

தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ் தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த *

வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்த துவே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.3

செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும் *

சங்கொடு சக்கரம் கண்டு கந்தும் தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும் *

திங்களும் நாளும் விழாவ றாத தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த *

நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ! நாணும் நிரையு மிழந்த துவே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.4

இழந்தவெம் மாமை திறத்துப் போன என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார் *

உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ? ஓதக் கடலொலி போல * எங்கும்

எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த *

முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன் அன்னையர் காள்!என்னை யென்மு னிந்தே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.5

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலை யுண்டு மருதி டைப்போய் *

கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன் *

முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள் முன்னி யவன்வந்து வீற்றி ருந்த *

கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே காலம் பெறவென்னைக் காட்டு மினே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.6

காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால் *

நீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான் *

ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா *

கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரை யிற்கே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.7

பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த *

பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன் *

ஆரை யினிங் குடையம் தோழி என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை *

ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.8

கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்

கொண்டு * அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில் தோழீ *

மண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால் *

தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.9

சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள் அன்னையர் காள் என்னைத் தேற்ற வேண்டா *

நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை *

கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த *

ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத் தென்திருப் பேரை யின்மா நகரே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.10

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லையென் தோழி மீர்காள் *

சிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப் பேரையில் வீற்றி ருந்த *

மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவ ரையன்று மங்க நூற்ற *

நிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.3.11

** ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும் *

ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன *

கேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவைதிருப் பேரையில் மேய பத்தும் *

ஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி மைத்திறத் தாழி யாரே