Thiruvaikundam ( Sri Vaikundam – Sri Vaikundanatha Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 2 |
Total | 2 |
1 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.4
புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று *
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி *
நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப *
பளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே
2 நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.2.8
எங்கள் கண் முகப்பேயுலர்களெல்லாம் இணையடிதொழு தேழுநிறைஞ்சி *
தங்களன்பாரத்தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்தபூசிப்ப *
திங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடியாய் திருவைகுந் தத்துள்ளாய்தேவா *
இங்கண்மா ஞாலத்திதனுளுமொருநாள் இருந்திடாய் வீற்றிடங்கொண்டே