Thiruppulingudi ( Sri Kaaichina Vendha Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 12 |
Total | 12 |
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும் *
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான் *
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் *
இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே
** பண்டைநாளாலேநின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு * நின்கோயில்சீய்த்துப்பல்டிகால் குடிகுடி வழிவந்த நாட்செய்யும் *
தொண்டரொர்க்கருளிச்சோ திவாய்திறந்து உன் தாமரைக் கண்களால்நோக்காய் *
தொண்டிரைப்பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடா தானே
குடிக்கிடந்தாக்கஞ்செய்து நின்தீர்த்தபடிமைக்குற்றேவல் செய்து * உன் பொன்
னடிக்சுடவாதே வழிவருகின்ற அடியரோர்க்கருளி * நீயொருநாள்
படிக்களவாகநிமிர்த்த நின்பாதபங்கயமேதலைக்கணியாய் *
கொடிக்கொள்பொன்மதிள் சூழ்குளிர்வயற்சோலைத் திருப்புளிங்குடிக்கிடந்தானே
கிடந்தநாள் கிடந்தாயேத்தனை காலங்கிடத்தி உன்திருவு டம்பசைய *
தொடர்ந்து குற்றவேல் செய்து தொல்லடிமை வழி வருந்தொண்ட ரோர்கருளி *
தடங்கொள் தாமரைக் கண்விழித்து நீயேழுந்துன் தாமரை மங்கையும் நீயும் *
இடங்கொள் மூவுலகுந் தொழவிருந் தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே
புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று *
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி *
நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப *
புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே
பவளம்போல்கனிவாய் சிவப்பநீ காணவந்து நின்பன்னிலாமுத்தம் *
தவழ்கதிர்முறுவல்செய்து நின்திருக்கண்தாமரை தயங்கறின்றருளாய் *
பவளநன்படர்க்கீழ்ச்சங்குறைபொருநல் தண் திருப்புளிங்குடிக்கிடந்தாய் *
கவளமாகளிற்றினிடர்கெடத்தடத்துக் காய்சினப்பறையூர்ந்தானே
காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக்காரர் முகில் போல் *
மாசினமாலிமாலிமானென்று அங்கவர்படக் கனன்று முன்னின்ற *
காய்சினவேந்தே கதிர்முடியாநே கலிவயல்திருப்புளிங்குடியாய் *
காய்சின வாழிசங்குவாள் வில் தண்டேந்தியெம்மிடர்கடிவானே
எம்மிடர் கடிந்திங்கென்னையாள்வேனே இமையவர் தமக்குமாங்கனையாய் *
செம்மடல்மருந்தாமரைப்பழனத் தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய் *
நம்முடையவடியர்கவ்வைகண்டுகேந்து நாங்களித்துளஉலங்கூர *
இம்மடவுலகர்காண நீயொருநாள் இருந்திடாயெங்கள் கண்முகப்பே
எங்கள் கண் முகப்பேயுலர்களெல்லாம் இணையடிதொழு தேழுநிறைஞ்சி *
தங்களன்பாரத்தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்தபூசிப்ப *
திங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடியாய் திருவைருந் தத்துள்ளாய்தேவா *
இங்கண்மா ஞாலத்திதனுளுமொருநாள் இருந்திடாய் வீற்றிடங்கொண்டே
வீற்றிடங்கொண்டுவியன் கொள்மாஞாலத்து இதனுளுமிருந்திடாய் * அடியோம்
போற்றியோவாதே கண்ணிணைகுளிரப் பூதுமலராகத்தைப்பருக *
சேற்றிளவாளைசெந்நூடுகளும் செழும்பணைத்திருப்புளிங்குடியாய் *
கூற்றமாயசுரர் குலமுதலரிந்த கொடுவினைப்படைகள் வல்லனே
கொடுவினைப்படைகள்வல்லையாய் அமரக்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய் *
கடுவினைநஞ்சேயென்னுடையமுதே கலிவயல்திருப்ஙபளிங்குடியார் *
வடிவிணையில்லாமலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை *
கொடுவினையேணும்பிடிக்கந்யொருநாள் கூவுதல் வருதல்செய்யாயே
** கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் கடைந்தவன்தன்னை *
மேலிநன்கமர்ந்த வியன்புனற்பொருநல் வழுதிநாடன் சடகோபன் *
நாவியல்பாடலாயிரத்துள்ளும் இவையுமோர்பத்தும் வல்லார்கள் *
ஓவுதலின்றியுலகம் மூன்றளந் தான் அடியிணையுள்ளத் தோர்வாரே