080-Thiruppullanni


Thiruppullanni ( Sri Kalyana Jagannatha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 20
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 21

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.1

** தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு *

பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய் *

என்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம் *

புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.2

உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு *

முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள் *

பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம் *

பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.3

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு *

தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து * பின்

பேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம் * போது

நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.4

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு * முன்

நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன் *

மங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர் *

பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.5

உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு *

துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து * பின்

தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம் *

புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.6

எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு *

வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம் *

கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும் *

புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.7

பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய் *

இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன் *

விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு * வெண்திரை

புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.8

அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய் *

சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு *

உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு * இசை

புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.9

ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப் *

பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் *

ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப் *

போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.3.10

** இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை *

புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல் *

கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை *

வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.1

** காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும் *

ஏவாயி னூடியங்கும் எஃகில் கொடிதாலோ *

பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன் *

பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.2

முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த *

மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன் *

பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி *

அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.3

வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம் *

செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள் *

பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன் *

தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.4

பரிய இரணியன் தாகம் அணியுகிரால் *

அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு *

பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன் *

அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.5

வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த *

வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும் *

எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும் *

புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.6

சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான் *

அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால் *

செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன் *

இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.7

கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல் *

தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ * புனையார்

மணிமாடப் புல்லாணி கைதொழுதேன் *

வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.8

தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த *

பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு *

பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன் *

தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.9

வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும் *

ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு *

போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன் *

ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.4.10

** பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை *

மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை *

கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார் *

மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 131

நீர்மலைமேல் மன்னும் மறைநான்கும் ஆனானை * புல்லாணித்

தென்னன் தமிழி வடமொழியை